என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ariyalur district"

    • அரியலூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது
    • வரும் 10-ந் தேதி நடக்கிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காவல் துறையில்மதுகுற்ற வழக்கு–களில் கைப்பற்ற–ப்பட்டு அரசுடைமை–யாக்கப்பட்ட வாகனங்களை வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பளர் பெரோஸ்கோன் அப்துல்லா முன்னிலையில் 48 இரண்டு சக்கர வாகனங்கள்மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் ஆக மொத்தம் 49 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.

    அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த–வர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, அரியலூர் மாவட்டம் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண். 9498165793.

    ஏலத்தில் கலந்து கொள்ப–வர்கள் காலை 10 மணிக்குள் 1000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

    வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்த–வர் ஏலத்தொகை–யுடன் ஜிஎஸ்டி வுடன் சேர்த்து பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலு–த்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    வாகனங்களை 09ந் தேதி காலை 10.00 மணிமுதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வரவேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்து–ள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 3 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகள் பிரியா (வயது 17). இவர் அரியலூரில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரியில் படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் ராணி (வயது 16). இவர் அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

    பிரியாவும், ராணியும் தோழிகள் ஆவர். 2 பேரும் சேர்ந்த பஸ் மூலம் அரியலூருக்கு சென்று படித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி பிரியாவும், ராணியும் கல்லூரி-பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்க்கு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அரியலூர் மாவட்டம் தா.பழுர் அடுத்த அணைகுளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 23). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த தனது சான்றிதழ்களை எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் தேடியும் கிருஷ்ணவேணி கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழுர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை நடக்கிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. 

    இதேபோல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந்தேதி கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

    போட்டிகளில் முதல் இடம் பிடிப்பவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. 9 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஜெ. குரு நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர் மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த ஜெ. குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஜெ.குருவின் உடலுக்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மரணம் அடைந்த ஜெ.குரு 2001ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, அரியலூர், உடையார் பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நேற்றிரவு பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்தவர் குரு. இதனால் அவரது கிராமத்தின் பெயராலேயே காடுவெட்டிகுரு என அழைக்கப்பட்டார். அவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், விருதாம்பிகை என்ற மகளும், கனல் அரசு என்ற மகனும் உள்ளனர்.

    குருவின் உடலுக்கு இன்று காலை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். நாளை காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு பஸ்கள் இயங்காததாலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஜார்கள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளருமான பணீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேளாண்மைத்துறை,

    வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களிடம் துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி கலந்தாய்வு மேற்கொண்டார்.

    மேலும், அனைத்து துறை சார்ந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். ஆழ்குழாய் கிணறுகள் பழுது ஏற்பட்டு இருப்பின் அவற்றை உடனடியாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

    முன்னதாக, ரெங்க சமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதை அவர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்.

    இதில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×