என் மலர்
நீங்கள் தேடியது "Arjun Kadhe"
- அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி 6-0, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றது
- இரட்டையர் பிரிவில் அர்ஜூன் காடே 4வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சென்னை:
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் காடே- பிரிட்டனின் ஜே கிளார்க் ஜோடி, செபஸ்தியான் (ஆஸ்திரியா)- நினோ செர்டாரசிக் (குரோசியா) ஜோடியை எதிர்கொணட்து. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-0, 6-4 என்ற நேர்செட்களில் அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் அர்ஜூன் காடே இரட்டையர் பிரிவில் பெறும் 4வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் நிகோலஸ் மொரீனோ டி அல்போரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் சுமித் நாகல் 4-6, 2-6 என தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற டி அல்போரன் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக் பர்செலுடன் மோதுகிறார்.