search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "army soldier arrest"

    நெல்லை மாவட்டம் சுரண்டையில் கோவில் விழாவில் குடிபோதையில் போலீசாரை தாக்கிய ராணுவவீரர் கைதானார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுரண்டை மேல தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் ஹரியானா மாநிலத்தில் ராணுவவீரராக வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று அந்தப்பகுதியில் உள்ள அழகுபார்வதி அம்மன் கோவிலில் தேரோட்ட விழா நடந்தது. விழாவுக்கு சுரேஷ் குடிபோதையில் சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும், ராணுவ வீரர் சுரேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீர் என்று சுரேஷ் அங்கு கிடந்த கம்பை எடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பேரானந்தசாமியை தாக்கினார். அதை தடுத்த மற்றொரு போலீஸ்காரர் குமாரையும் தாக்கினார். இதில் போலீசாருக்கு கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கூடுதல் போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட சுரேசை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொடுத்த புகாரில்  உயர் போலீஸ் அதிகாரிகள், ராணுவவீரர் சுரேஷ்சிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காட்பாடி அருகே போலீஸ்காரரை தாக்கியது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த லத்தேரி மாலீயபட்டு கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    இதையொட்டி விழா குழுவினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பனமடங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஊர் இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ்காரர் சதீஷ் தட்டி கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 6 இளைஞர்கள் சரமாரியாக சதீஷை தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 27) ராணுவ வீரர். அவரது சகோதரர் சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடிவருகின்றனர்.
    நீலகிரி மாவட்டம் குன்னூரில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளப் ரோட்டை சேர்ந்தவர் பவுலோஸ். இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 27). இவர் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கடந்த 14-ந் தேதி கிறிஸ்டோபர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்தநிலையில் இவர் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி மேல் குன்னூர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர். அப்போது சிறுமியை ராணுவ வீரர் கிறிஸ்டோபர் வேளாங்கண்ணிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் சிறுமியை தேடுவதை அறிந்த ராணுவ வீரர் சிறுமியை அழைத்துக்கொண்டு குன்னூருக்கு வந்தார். அவரை சிம்ஸ் பூங்கா அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ராணுவ வீரர் கிறிஸ்டோபர் சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் அவரை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் 15 நாட்கள் கிறிஸ்டோபரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கிறிஸ்டோபரை போலீசார் குன்னூர் சிறையில் அடைத்தனர்.
    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே போலீஸ் நிலையத்தை அடித்து சூறையாடியதாக அளித்த புகாரின் பேரில் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் பேரையூர் சங்கரலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் சின்னத்துரை (வயது26). இவர் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    இவரது உறவினர் மீது ஒரு பிரச்சனை தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சின்னத்துரை நேற்று தனது நண்பர் ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த ராஜனுடன் (27) நாகையாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு உறவினர் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்து கேட்டார். அப்போது அங்கிருந்த போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்ததோடு, போலீஸ் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியதாக ராணுவ வீரர் சின்னத்துரை, ராஜன் ஆகியோர் மீது பணியில் இருந்த போலீஸ்காரர் அழகர்சாமி (40) புகார் செய் தார்.

    இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாகையாபுரம் போலீசார் ராணுவ வீரர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.
    காரியாபட்டி அருகே கோவில் சிலைகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது மாங்குளம். இங்குள்ள செண்பக மூர்த்தி கோவிலில் நாளை களரி திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த செண்பக மூர்த்தி, ராக்காயி அம்மன் உள்பட 7 சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டது.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் சிலைகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சிலை உடைப்பு குறித்து ஆதியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கோவில் சிலைகளை சேதப்படுத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆபிரகாம் லிங்கன், ராஜா மற்றும் 3 பேர் என்பது தெரியவந்தது.

    இவர்களில் ஆபிரகாம் லிங்கன் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆபிரகாம் லிங்கன் மீரட்டிலும், ராஜா நாக்பூரிலும் பணியாற்றி வருகின்றனர்.

    கோவில் பூசாரியை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறி வந்த நிலையில் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். #Tamilnews
    ×