search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "artistes"

    • பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
    • மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது.

    இதற்கு முன்பாக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை அயோத்தி வருகிறார்.

    பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தையும், மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

    இதைத் தொடர்ந்து, 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க நாடு முழுவதிலிருந்தும் சுமார் 1400 கலைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

    இதுகுறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமான நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் ராம் பாத் வரை அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 40 மேடைகளில் 1,400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை அளிக்க உள்ளனர்.

    இதில், அயோத்தியைச் சேர்ந்த வைபவ் மிஸ்ரா, காசியைச் சேர்ந்த மோகித் மிஸ்ரா டமாரம் அடித்து, சங்கு ஊதி பிரதமரை  வரவேற்கின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×