search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arudra Darshan Festival"

    • உத்திராயண புண்ணியகால கொடியேற்றமும் நடக்கிறது
    • பக்தர்களுக்கு மகா தீப மை வழங்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நாளை காலை 10 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நடராஜர் நாளை விடியற்காலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்பு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட தீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்பு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து மாடவீதி உலா நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 10 நாள் விழா நாளை காலை 5.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சாமி சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் கொடியேற்று விழா நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை மாலை இருவேளையும் சாமி மாட வீதி உலா நடைபெறுகின்றன.

    தொடர்ந்து 10ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 6:15 மணிக்கு அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி கொடுப்பார். தொடர்ந்து இரவு திருவூடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    • தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் கோவில் ஆகும்.
    • இன்று நடைபெற்ற கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் கோவில் ஆகும். சிவபெருமான் திரு நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள இக்கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் 10 நாட்களும் சுவாமி சன்னதி அருகே அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதியில் திருவெண்பாவை பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா வருகிற 6-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு தாமிரசபை மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொடி பட்டமானது பல்லக்கில் கோவில் உட்பிரகாரத்தில் வீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சேவூர் அங்காளம்மன் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    சேவூர் :

    கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 5-ந் தேதி மாலை 6 மணிக்கு சேவூர் அங்காளம்மன் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. திருவாதிரை நாச்சியார் சிறப்பு அலங்காரத்துடன், முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெறவுள்ளது. இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6-ந் தேதி காலை 9 மணிக்கு நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாளுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து காலை 11 மணிக்கு சிவபெருமானுக்கு ராக தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    மதியம் 2 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் கோவில் வெளிபுற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகரை மூன்று முறை சுற்றும் "பட்டி சுற்றுதல் "நிகழ்ச்சி நடைபெற்று, திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கையால வாத்திய இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சாமி திருவீதி உலா மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு 6-ந் தேதி காலை 9 மணி முதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்திரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
    • திருவாதிரை நாச்சியாருக்கு மாங்கல்ய நோன்பு ,அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்திரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 6-ந் தேதி ஆருத் ரா தரிசன விழா நடக்க உள்ளது. முன்னதாக வருகிற 28-ந்தேதி காலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மாலை இருவேளையும் திருவெம்பாவை மற்றும் பூஜைகள் நடைபெறும். திருவாதிரை நாச்சியாருக்கு மாங்கல்ய நோன்பு ,அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 6-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் சிவகாமி அம்மையார் உடனமர் நடராச பெருமானுக்கு 53 திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து மகாதீபாராதனைமற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  

    ×