என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arulnithi"

    • லைகா புரொடக்ஷன்ஸ் தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.
    • இந்நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளார்.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது 'பொன்னியின் செல்வன் 2', 'இந்தியன் 2', 'லால் சலாம்' மற்றும் அஜித் 62 படத்தை தயாரித்து வருகிறது.

    திருவின் குரல்

    திருவின் குரல்

    இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிருவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 'திருவின் குரல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அருள்நிதி தற்போது திருவின் குரல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது.

    வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.

    திருவின் குரல்

    திருவின் குரல்

    இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    திருவின் குரல்

    திருவின் குரல்

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் எனவும் இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டைரி’.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருந்தார்.

    அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டைரி'. இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ருத்ரன் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    புதிய அறிவிப்பு
    புதிய அறிவிப்பு

    இந்நிலையில் டைரி படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ள 12அது படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கவுள்ளார். இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    • படத்தின் வசூல் மற்றும் முன்பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,
    • திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகி 15 ஆம் தேதி வெளியாகியது.

    இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அருள்நிதி நடித்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் பெற்று வருகிறது. இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    படத்தின் வசூல் மற்றும் புக்கிங்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் படத்தின் அடுத்த பாகத்தை குறித்து இயக்குனர் அஜய் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    படத்தின் தொடர்ச்சியாக அடுத்து இரண்டு பாகங்கள் எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வேறு ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும் டிமான்ட்டி காலனி 3 படத்தை இயக்கப்போவதாகவும். அப்பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டிமான்ட்டி காலனி 2 கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது.
    • திரைப்படம் இதுவரை உலகளவில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் இதுவரை உலகளவில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் இதுவரை உலகளவில் 85 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பெருமளவு மக்களின் பாராட்டுகளை பெற்றது. இரண்டாம் பாகத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்கு லீட் கொடுத்து தான் முடித்திருப்பார்கள். படக்குழுவும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தது. இந்நிலையில் அதன் அப்டேட்டாக படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருவதாகவும்.

    இப்படம் ஜப்பான் உள்பட வெளிநாடுகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
    • சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் தற்போது அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருள்நிதி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்தும் உடல் எடை கூட்டியும் அருள்நிதி தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது.

    கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் இப்படத்தின் வில்லனாக ஹரீஷ்பேரடி நடிக்கிறார். இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைரி.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார்.

    டைரி

    இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'டைரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள 'டைரி' திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'.
    • 'தேஜாவு' திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தேஜாவு படக்குழு

    இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர். இதில் நடிகர் அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். 'தேஜாவு' படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்கள் இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றி படமாக்கியுள்ளார்.

    தேஜாவு படக்குழு

    இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் "தேஜாவு" திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

    • அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைரி.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார்.

    இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார்.

    டைரி

    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டைரி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    த்ரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த டிரைலரை கமல்ஹாசன், விக்ரம், அமீர்கான் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

    • அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைரி.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார்.

    டைரி

    இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் தேஜாவு.
    • இந்த படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அருள் நிதி

    இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    ×