search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunachal border"

    • உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதையும் அடங்கும்.
    • இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும்.

    பீஜிங்:

    இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே பிரதமர் மோடி கடந்த 9-ந்தேதி அருணாசலபிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதையும் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடியின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்வென் பின் கூறியதாவது:-

    சாங்னான் பகுதி (அருணாசல பிரதேசத்தை குறிப்பிடுகிறது) சீனப் பகுதி. அதை இந்தியா, அருணாசலப்பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, அதை உறுதியாக எதிர்க்கிறது. அப்பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை.

    இந்தியாவின் நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும். சீனா-இந்திய எல்லையின் கிழக்குப் பகுதிக்கு மோடியின் வருகையை சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. அதை உறுதியாக எதிர்க்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. #India #China #GoldMine
    பீஜிங்:

    இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.

    இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அருணாசலபிரதேச எல்லையில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி உள்ளது.

    இந்த சுரங்கத்தில் தங்கம் தவிர வெள்ளி மற்றும் பல விலைமதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சீன பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் பணிக்காக அங்கு சாலை வசதிகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    ஏற்கனவே இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டுவது பிரச்சினையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. 
    ×