என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ArunJaitley"
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்ட மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி விட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவையும் அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அவர் புகார் கூறி உள்ளார்.
இவற்றுக்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்து, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு நிகழ்ச்சிகளில் திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) பேசிய ராகுல் காந்தி என்னைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
முதல் பேச்சில் விஜய் மல்லையாவை நான் நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். மேலும், அவர் லண்டனுக்கு தப்பி விடப்போகிறேன் என என்னிடம் கூறியதாகவும், நான் அவருக்கு அதற்கு உதவினேன் என்று ஒப்புக்கொண்டுள்ளேன் என்றும் கூறி இருக்கிறார்.
இரண்டாவது பேச்சில், நிரவ் மோடியையும் நான் நாடாளுமன்றத்தில் சந்தித்தை ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். அவர் (நிரவ் மோடி) என்னை சந்தித்து, தான் நாட்டை விட்டு தப்பிச்செல்வதாக கூறியதாகவும், நான் அதற்கு உதவியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதில் உண்மை என்னவென்றால், என் வாழ்வில் நிரவ் மோடியை நான் பார்த்ததாகவே நினைவில் இல்லை. அப்படி இருக்கையில், நாடாளுமன்றத்தில் நான் அவரை சந்தித்தேனா என்ற கேள்விக்கே இடம் இல்லை.
ராகுல்காந்தி கூறியபடி அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தால், அதை அங்குள்ள வரவேற்பு ஆவணங்கள் காட்டுமே.
பின் நான் எங்கே ஒப்புக்கொண்டேன், ராகுல் காந்தி அவர்களே?
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விஜய் மல்லையா ஒரு முறை நாடாளுமன்ற தாழ்வாரத்தில் என்னை துரத்தி வந்து பேசினார். நான் அவர் பேசியதை காது கொடுத்து கேட்கவில்லை.
உங்கள் திட்டத்தை நீங்கள் வங்கிகளிடம் போய் பேசுங்கள் என்று கூறி விட்டேன்.
இதைத்தான் அவர் நான் மல்லையாவை சந்தித்ததாகவும், அவர் லண்டனுக்கு தப்பப்போவதாக கூறியதாகவும், நான் உதவியதாகவும் கூறி உள்ளார்.
இது முழுக்க முழுக்க பொய். இப்படிப்பட்ட பொய்யை அவர் எப்படி கற்பனை செய்கிறார்?
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். #ArunJaitley #NiravModi #RahulGandhi
ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.
அப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.
தமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.
பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.
இந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான விஷயம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.
இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley
புதுடெல்லி:
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இத்தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலை தள பக்கத்தில் கூறிதாவது:-
கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தேசத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சரியானதல்ல.
ஆட்கொல்லி புலியின் மீது சவாரி செய்வது ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது மிகத் தீவிரமான விஷயம்.
இவ்வாறு அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #BJP #ArunJaitley
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்