என் மலர்
நீங்கள் தேடியது "Asaram babu"
- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
- 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30-ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
- ஆசாராம் பாபு ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
- ஜாமினில் இருக்கும்வரை அவர் ஆதரவாளர்களை சந்திக்கக் கூடாது என தெரிவித்தது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதற்கிடையே, வயது மூப்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில், ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், ஜாமினில் இருக்கும்வரை அவர் ஆதரவாளர்களை சந்திக்கக் கூடாது எனவும் தெரிவித்தது.
- ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு ஆயுள் தண்டனை பெற்றார்.
- டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் [DMRC-யின்] வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் பெட்டிகளில் சாமியார் ஆசாராம் பாபுவின் உருவப்படம் கொண்ட விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விளம்பர போஸ்டர்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் விளம்பர போஸ்டர்களை மெட்ரோவில் காட்சிப்படுத்த அனுமதித்திருப்பது டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் [DMRC-யின்] வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். விமர்சனங்களுக்கு பின் பதிலளித்த டெல்லி மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ வளாகத்திலிருந்து இந்த விளம்பரங்களை விரைவில் அகற்றுமாறு உரிமதாரருக்கு DMRC உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் ஆகியோர் மீது குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அதில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயணன் சாயும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர். அதன்படி ஆசாராம் பாபு மற்றும் நாராயணன் சாய் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சூரத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், இவ்வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை விவரம் 20-ம் தேதி அறிவிக்கப்படும்.
சாமியார் ஆசாராம் பாபு ஏற்கனவே வெவ்வேறு கற்பழிப்பு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #AsaramBapu #NarayanSai