என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ashes"
- ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்களிடம் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம்.
- எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை.
சமீபத்தில் நடந்த முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.
இந்நிலையில் இந்த முறைதான் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு பீர் அடிக்காம வந்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்கள் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம். அப்போது பென் ஸ்டோக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று அறையின் கதவை தட்டினோம். அவர் சிறிது நேரம் கழித்தே கதவை திறந்தார். வந்த வேகத்தில் 2 நிமிடம் காத்திருங்கள் என்று கூறி சென்றார். ஒரு மணி நேரம் ஆகியும் வராத காரணத்தால் பீர் அடிக்க வேண்டாம் என்று கூறி நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை. இது அசிங்கமாக இருந்தது. ஆனால் சில மணி நேரம் கழித்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு வேலையாக சென்றதால் தாமதமாகி விட்டது. மன்னித்து விடுங்கள். மது அருந்துவது என்று முடிவு செய்து விட்டோம். அதனால் அதை கைவிட வேண்டாம். கண்டிப்பாக மது அருந்து விட்டு செல்லலாம் என அவர் கூறினார்.
அவர் கூறும் அந்த வேலை நான் எனது அறைக்கு சென்று இருந்தேன். மது அருந்தாத மற்ற வீரர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்ந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
லீட்ஸ்:
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓல்லி போப் விலகியுள்ளார். ஏற்கனவே முதல் இரு டெஸ்டில் தோற்ற நிலையில் இவரது விலகல் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் நாதன் லயன் ஏற்கனவே மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி என மெக்ராத் கூறினார்.
- இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள் என மைக்கெல் வாகன் கூறினார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆஷஸ் தொடரில் இந்த முறை ஆஸ்திரேலியா முழுமையாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக விளையாடி வரும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி. இது நம்ப முடியாத ஒரு போட்டித்தொடராக இருக்கப்போகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிவு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் அமைய வேண்டியது அவசியம். ஒவ்வொரு டெஸ்டும் கடைசி வரை பரபரப்பாக நகர்ந்து, அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன். தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் என்பதே எனது கணிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,
2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. கிட்டத்தட்ட இதே அணி வீரர்களுடன் கடைசியாக 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆடிய போது அவர்களால் 2-2 என்று தொடரை சமன்தான் செய்ய முடிந்தது. இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள். தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும்.
இவ்வாறு வாகன் கூறினார்.
- ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
- இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.
இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடராக கருதப்படும். இதனால் இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் லைன் என்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் உள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இருந்து வந்தார். அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது.
இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் அவரிடம் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடிய ஹிசில்வுட், இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உலகக்கோப்பை நடைபெறும் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேிதி வரையிலான நாட்களை ஆஷஸ் தொடருக்கு பயன்படுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. உலகக்கோப்பை நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். கடந்த முறை சொந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.
உலகக்கோப்பை நடக்கும்பொழுது நான் டிவி-யில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதுதான் சற்று வருத்தத்தை கொடுக்கிறது. தொடரில் பாதியில் யாராவது ஒருவருக்கு காயம் அடைந்தால், வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
உலகக்கோப்பை இடம்பெறாத நிலையில், மேலும் சில நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஆஷஸ் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்