search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashes 2019"

    2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. #Ashes2019
    டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடராகும். இந்த தொடர் ஒருமுறை ஆஸ்திரேலியாவிலும், மறுமுறை இங்கிலாந்திலும் நடத்தப்படும்.

    2017-18  ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



    அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் அயர்லாந்துக்கு எதிராக முதன்முறையாக இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் நான்கு நாட்கள் கொண்டதாகும். இது லார்ட்ஸில் ஜூலை 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.

    ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணை:-

    முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை- எட்ஜ்பாஸ்டன்
    2-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை - லார்ட்ஸ்
    3-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை - ஹெட்லிங்லே
    4-வது டெஸ்ட் - செப்டம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை - ஓல்டு டிராஃப்போர்டு
    5-வது மற்றும் கடைசி டெஸ்ட் - செப்டம்பர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை - ஓவல்

    2019-ல் இருந்து ஐசிசி உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் லீக் அறிமுகப்படுத்துகிறது. இதன் முதல் தொடராக இந்த ஆஷஸ் தொடர அமைகிறது.
    ×