என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Ashleigh Gardner"
- கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு குஜராத் அணி தள்ளப்பட்டிருந்தது.
- கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி செயல்பட்டு வந்தார்.
புதுடெல்லி:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி செயல்பட்டு வந்தார்.
இவர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகள் என வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே தற்சமயம் பெத் மூனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆஷ்லே கார்ட்னருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 473 ரன்களும், இங்கிலாந்து 463 ரன்களும் எடுத்தன.
10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது. போப் லிட்ச் பீல்ட், பெத் மூனி களத்தில் இருந்தனர்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற 4-வது நாளில் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேனி வியாட் 20 ரன்னுடனும் கேட் கிராஸ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 5-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.