என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ashok Khelat"
- ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்
- காங்கிரஸ் கட்சி தற்போது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதனை அடுத்து, காங்கிரஸ் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது தனது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.
மத்தியபிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மகன் நகுல்நாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனான வைபவ் கெலாட் போட்டியிடுகிறார்.
ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பியான ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.
- பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.
- அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.
இதற்கு சச்சின் பைலட் இன்று பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல என்றும், வசுந்தரா ராஜே தான் தலைவர் என்றும் நினைக்கிறேன். அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.
இவ்வாறு சச்சின் பைலட் கூறியுள்ளார்.
- சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
- அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.
ஜாலாவர்:
கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:
தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.
வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1
1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை குஜராத் அரசியலில் இனி பலிக்காது.
- இந்த முறை குஜராத்தில் ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும்.
சூரத்:
குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்.
மற்றொருபுரம் ஆம்ஆத்மி தொண்டர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள மஹுவாவில் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பொதுமக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும். மோர்பி பாலம் விபத்து சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை. தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
குஜராத்தில் கள்ளச் சாராயத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை இனி பலிக்காது. இந்த முறை ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும். மோடியும், அமித்ஷாவும் வாரந்தோறும் குஜராத்திற்கு வந்தால் என்ன அர்த்தம்? அவர்களின் பலவீனமான நிலையை அது காட்டுகிறது. அதனால் இருவரும் இங்கு முகாமிட்டுள்ளனர்.
ராகுல் காந்தி, பாத யாத்திரைக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இதுவரை இங்கு வரவில்லை, ஆனால் அவர் எழுப்பும் பிரச்சினைகள் இங்குள்ள ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரியும். இமாச்சல பிரதேச தேர்தலில் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி திடீரென வாபஸ் பெற்றது குறித்து கேஜ்ரிவாலைக் கேட்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் யாருக்குத் தெரியும்? அவர்கள் பாஜகவுடன் கூட்டுச் சேர்கிறார்களா? அவர்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்