என் மலர்
நீங்கள் தேடியது "Ashokshavan"
- அசோக் சவான் சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை சந்தித்து பேசினார்.
- பாராளுமன்ற தேர்தலை யொட்டி அசோக்சவான் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் அசோக்சவான். இவர் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மறைந்த சங்கர்ராவ் சவானும் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்தார்.
மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010-ம் ஆண்டு அசோக்சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகி உள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானாபடோலேவுக்கு அசோக்சவான் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
முன்னதாக இன்று காலை அசோக் சவான் சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை சந்தித்து பேசினார்.
இன்று போகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) பதவியை நான் சட்டமன்ற சபாநாயகர் ராகுல்ஜி நர்வேகரிடம் அளித்துள்ளேன்" என்று அசோக் சவான் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலை யொட்டி அசோக்சவான் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அசோக்சவான் பாஜகவில் சேரக்கூடும் என்ற தகவல் குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் கூறியதாவது:-
பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் சேர விரும்புகிறார்கள். பல காங்கிரஸ் தலைவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
ஏனெனில் அவர்கள் தங்கள் கட்சியில் மூச்சுத்திணறல் அடைந்து உள்ளனர். ஆகவே அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.