என் மலர்
நீங்கள் தேடியது "Asia Championships"
- 16-21, 21-12, 11-21 என சீனாவின் ஜு குயாங் லுவிடம் வீழ்ந்தார்.
- கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய், சீனாவின் ஜு குயாங் லு-வை எதிர்கொண்டார்.
இதில் 16-21, 21-12, 11-21 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்ததார்.
மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப், அனுபமா உத்யாயா தொடக்க சுற்றுடன் வெளியேறினர். ஆகார்ஷி 13-21, 7-21 என தோல்வியடைந்தார். அனுபமா 13-21, 14-21 என தோல்வியடைந்தார்.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த போட்டியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தைவான் வீராங்கனை ஹு வென் சீயுடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பஹ்ரைன் வீரர் அட்னன் இப்ரஹமுடன் மோதினார். இதில் கிடாம்பி 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, மலேசிய ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
- நேற்று நடந்த போட்டியில் பி.வி.சிந்து, பிரனாய் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை யூ ஹானுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசிய வீரர் வர்டயோவுடன் மோதினார். இதில் பிரனாய் 21-16, 5-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14- 21, 22-20, 9-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
- நேற்று நடந்த காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் செ யங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்களை 5-21, 9-21 என்ற செட் கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்றது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி இறுதிக்கு முன்னேறியது.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக்-சிராக் ஜோடி, சீன தைபே ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-18 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 13-14 என இருந்த நிலையில் காயம் காரணமாக சீன தைபே ஜோடி விலகியது. இதையடுத்து, இந்திய ஜோடி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.