search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Development Bank"

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. #ADB #AsianDevelopmentBank #TamilNadu
    புதுடெல்லி:

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டு தனி அதிகாரி ரோன் சிலாங்ஜென் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்திய மாநிலங்களில் நகர்ப்புறத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகள் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு அவற்றின் குடிநீர் வினியோகம், கழிவு நீரகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குறைந்த பட்சம் 10 நகரங்கள் பயன் அடையும்.

    பருவநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாடு வறட்சி, மழை, வெள்ளம் ஆகியவற்றை சந்திப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் இந்த கடனுதவி தமிழ்நாட்டுக்கு பெரும் உதவியாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ADB #AsianDevelopmentBank #TamilNadu 
    ×