என் மலர்
நீங்கள் தேடியது "Assam CM"
- ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள்.
- சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை பாதுகாக்க முடியாது.
கட்ச்:
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசினார்.
அப்போது டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை அவர் எழுப்பினார்.
அப்தாப் மும்பையில் இருந்து ஷ்ரத்தா என்ற சகோதரியை வரவழைத்து லவ் ஜிகாத் என்ற பெயரில் 35 துண்டுகளாக வெட்டினார். மேலும் அவர் அந்த உடலை குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். உடல் பாகங்கள் குளிர் சாதன பெட்டியில் இருக்கும்போது, வீட்டிற்கு மற்றொரு பெண்ணை அழைத்து வந்து டேட்டிங் செய்யத் தொடங்கினார்.
ஏன் அவர் இந்து பெண்களை மட்டும் குறி வைத்து காதலில் வீழ்த்துகிறார் என போலீசார் விசாரித்தனர். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதால் அப்படி செய்வதாக அப்தாப் கூறியுள்ளார். இதனால்தான் லவ் ஜிகாத்க்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவை. மீண்டும் இது போன்ற சம்பங்கள் நிகழாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம்.
நாட்டின் ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள். நாட்டிற்கு சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை எங்களால் பாதுகாக்க முடியாது. அதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்குவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதிக்கும்.
- பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை கிடையாது.
கவுகாத்தி:
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைத்தால் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார். பொங்காய்காவன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.
ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.
இதுதொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில்,
பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும். ஜஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை- அசாம் முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | On 4 Army personnel who have lost their lives in action in J&K's Doda, Assam CM Himanta Biswa Sarma says," The government will give an answer to Pakistan-sponsored terrorism. It is our duty to maintain peace in Jammu & Kashmir." pic.twitter.com/l2Fk750DZx
— ANI (@ANI) July 16, 2024
- பா.ஜ.க. ஆட்சி செய்யும் உ.பி.யில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் உள்ளது.
- அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனையொட்டி பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக யோகி அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், " பேஸ்புக்கில் இந்து பெயர்களை வைத்துக்கொண்டு இந்து பெண்களை கவர்ந்து சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தான் அந்த பையன் இந்து இல்லை என்பது அந்த பெண்ணிற்கு தெரியவருகிறது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.