என் மலர்
நீங்கள் தேடியது "Asteroid"
- பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.
- சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்:
விண்வெளியில் ராட்சத விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் சில விண்கற்கள் பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கின்றன.
இந்நிலையில் 298 அடி அகலம் கொண்ட ராட்சத விண்கல் இன்று பூமியை கடந்து செல்கிறது. 2013 டபிள்யூ-வி.44 என்று பெயரிடப்பட்ட இந்த ராட்சத விண்கல்லை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த விண்கல்லை நாசா 2013-ம் ஆண்டு கண்டு பிடித்தது. இது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வினாடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ராட்சத விண்கல் இந்திய நேரப்படி இன்று பிற்பகலில் பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.
ராட்சத விண்கல் கடந்து பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பூமியில் இருந்து 24.90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் இது மணிக்கு 26 ஆயிரத்து 316 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவித்தனர்.
- பூமியிலிருந்து 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த JV33 என்ற இந்த சிறுகோள் கடக்கவுள்ளது.
- 1 மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் இந்த சிறுகோள் பயணித்து வருகிறது.
620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த JV33 என்ற இந்த சிறுகோள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் பயணித்து வரும் இந்த சிறுகோள், நிலவை விட 3 மடங்கு தொலைவில் இருந்தாலும் ஒப்பீட்டளவில் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரவுள்ளது. இந்த சிறுகோளை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது.
- சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) விண்வெளியில் பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களை குறிப்பாக சிறுகோள்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதிலும், பகுப்பாய்வு செய்வதிலும் முன்னணியில் உள்ளது. தற்போது, மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி '2024-ஓன்' என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும்.
இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து, டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, 'விண்வெளியில் '2024 ஓஎன்' சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி இன்று (அதாவது நேற்று) பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி மீண்டும் பூமியை கடந்து செல்ல இருக்கிறது.
இந்தமுறை பூமிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமலும், ஆபத்துகள் இல்லாமலும் சிறுகோள் கடந்து சென்றது.
விண்வெளியில் சமீப காலமாக பூமிக்கு அருகில் வரும் சிறுகோள் (விண்கற்கள்), அதுபற்றி கண்காணித்து ஆராய்ச்சி செய்வதற்காக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள தொலைநோக்கிகளை பயன்படுத்தி இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடக்கிறது.
அதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்துள்ளன.
- 226 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டிருக்கிறது.
நாசா கண்டுபிடித்துள்ள சிறுகோள் உலக மக்களை அனைவரையும் கோட்பாட்டளவில் கோடீஸ்வரராக மாற்றும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 16 சைக் என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோளில் தங்கம், பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்துள்ளன.
இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே அமைந்துள்ளது. 16 சைக் சிறுகோளில் நிக்கல், இரும்பு, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை மிகுதியாக உள்ளது. விலை மதிப்பற்ற உலோகங்கள் அதிகளவு இடம்பெற்றுள்ள இந்த சிறுகோள் சூரிய குடும்பத்தில் மிகவும் மதிப்புமிக்க பொருளாக பார்க்கப்படுகிறது.
16 சைக் என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் முதன்முதலில் 1852 ஆம் ஆண்டு இத்தாலிய வானியலாளர் அன்னிபேல் டி காஸ்பரிஸால் கண்டறியப்பட்டது. இந்த சிறுகோள் 226 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டிருக்கிறது.
சிறுகோளில் நிக்கல் மற்றும் இரும்பு, இது தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்களின் கணிசமான இருப்பைக் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான கலவை விஞ்ஞானிகளை வசீகரித்தது மற்றும் பல ஆண்டுகளாக தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டது.
16 சைக் சிறுகோளின் மதிப்பிடப்பட்ட விலை 10 குவாட்ரில்லியன் டாலர்கள், அதாவது தோராயமாக 100 மில்லியன் பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. இந்த செல்வம் எப்போதாவது பூமிக்கு கொண்டு செல்லப்பட்டால், ஒவ்வொரு நபரும் கோட்பாட்டளவில் பில்லியன் கணக்கான ரூபாய்களை வைத்திருப்பார்கள் என்பது தெளிவாகிறது.
இந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 3.5 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. தற்போது இந்த சிறுகோளை விண்கலம் மூலம் சென்றடைய ஆகஸ்ட் 2029 வரை ஆகும்.
- நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.
- விண்கல்லானது ரஷியாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது .
சூரிய மண்டலத்தில் சிறுகோள்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் அடிக்கடி, புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதுண்டு. இவை பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே அழிந்து போகின்றன.
இந்த நிலையில் விண்கல் ஒன்று நேற்று புவி வட்டப்பாதைக்குள் வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 70 செ.மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் நள்ளிரவு வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்றும் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி அந்த விண்கல் நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. கண்டுபிடிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு அந்த விண்கல்லானது ரஷியாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது.
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், விண்கல் பல துண்டுகளாக சிதைந்து அங்குள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக சிதறி விழுந்தது. இதுதொடர்பான பிரம்மிப்பூட்டும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக விண்கல்லின் அளவு மற்றும் அது விழுந்த இடம் காரணமாக பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விண்கல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஒரு தீப்பந்து போல காட்சியளித்துவிட்டு சென்றுவிடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும்.
- 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள்.
2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் [asteroid] 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) விஞ்ஞானிகள், 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கி.மீ தொலைவிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறிந்தனர். இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரிய குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.
சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுக்கொள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2சதவீதம் [1-in-83] வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால் பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது. 8 மெகா டன் ஆற்றல் என்பது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும்.
விண்வெளியில் வைத்து சிறுகோள் மீது மோதலை ஏற்படுத்தி அதன் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர். 2024 YR4 சிறுகோளை கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் 2032 இல் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறுகோள் என்பது சூரியனைச் சுற்றி வரும் ஒரு சிறிய, பாறைப் பொருளாகும். சிறிய கூழாங்கல் சைஸ் முதல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் விட்டம் வரை இந்த சிறுகோள்கள் காணப்படுகின்றன.

சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள். பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள பெல்ட்டில் இவை காணப்படுகின்றன.
ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு, பூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu) என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஹயபுஸா 2 ( Hayabusa 2) என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது.
இந்நிலையில், ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த MINERVA-II 1 என்று அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிரக்கிக்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிரக்கியது இதவே முதல் முறையாகும்.
இதன் விண்கல் மீது மூலம் முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் தனதாக்கி கொண்டது.
This is a picture from MINERVA-II1. The color photo was captured by Rover-1A on September 21 around 13:08 JST, immediately after separation from the spacecraft. Hayabusa2 is top and Ryugu's surface is below. The image is blurred because the rover is spinning. #asteroidlandingpic.twitter.com/CeeI5ZjgmM
— HAYABUSA2@JAXA (@haya2e_jaxa) September 22, 2018
Photo taken by Rover-1B on Sept 21 at ~13:07 JST. It was captured just after separation from the spacecraft. Ryugu's surface is in the lower right. The misty top left region is due to the reflection of sunlight. 1B seems to rotate slowly after separation, minimising image blur. pic.twitter.com/P71gsC9VNI
— HAYABUSA2@JAXA (@haya2e_jaxa) September 22, 2018
This dynamic photo was captured by Rover-1A on September 22 at around 11:44 JST. It was taken on Ryugu's surface during a hop. The left-half is the surface of Ryugu, while the white region on the right is due to sunlight. (Hayabusa2 Project) pic.twitter.com/IQLsFd4gJu
— HAYABUSA2@JAXA (@haya2e_jaxa) September 22, 2018