என் மலர்
நீங்கள் தேடியது "Athlete"
- கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது.
- விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். உடல்நலம் பாதித்தது போல் சோர்வாக இருந்த அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
அப்போது தனது 13 வயதில் இருந்து, பலரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்தார். மாணவியின் இந்த புகார் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் பத்தினம் திட்டா மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய மாணவி, தன்னை சீரழித்தவர்களின் பெயர் விவரங்களையும் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 64 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 20 பேரை உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன், அவரது நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் இருந்தனர்.
காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர்கள் மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாணவி சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்களை தெரிவித்தபடி உள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பள்ளி மாணவி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணைய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு வரும் விவகாரம் பரபரப்பை அதிகரித்தபடி இருக்கிறது.
இந்தநிலையில் பள்ளி மாணவியை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்களின் விசாரணையை உடனடியாக தொடங்கினர். அவர்களின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.
- அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.
- போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
- தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்த அவரது காதலன், காதலனின் நண்பர்கள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். நேற்று முன்தினம் வரை 44 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாளப்புழாவை சேர்ந்த அபிஜித் என்ற வாலிபரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 2பேர் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.
விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார்.
- மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு வன்கொடுமையும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். வீராங்கனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்தவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று வரை வீராங்கனையின் காதலன், அவரது நண்பர்கள், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், 18 வயதுக்கும் உட்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் 6 வழக்குகளில் வீராங்கனை ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி உள்ளது. இங்கு பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக மலை சிங்கங்கள் 4500 முதல் 5500 வரையிலான எண்ணிக்கையில் வசிக்கின்றன.
இந்நிலையில் கொலராடோ பகுதியில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி அன்று காலை ஓட்டப்பந்தைய பயிற்சிக்காக டிராவிஸ் காஃப்மன்(31) ஓடிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்துள்ளார். திடீரென சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்தது. அது 80 பவுண்ட் எடை கொண்ட ராக்கி மலைப்பகுதியைச் சேர்ந்த மலைச்சிங்கம் ஆகும்.
சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றும் தப்பிக்க இயலவில்லை. இதனால் தற்காப்பு கருதி வேறு வழியின்றி சிங்கத்துடன் போராடி அதனைக் கொன்றார். டிராவிஸின் முகம் மற்றும் கைகளில் அடையாளம் தெரியாத அளவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
பின்னர் அவர் வனத்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து டிராவிஸ் முதல் முறையாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிங்கம் எனது மார்பில் ஏறி நின்றுக் கொண்டு கால்களில் உள்ள தன் கூரிய நகங்களை கொண்டு முகத்தில் கீறியது. என்னை காப்பற்றிக் கொள்ள சிங்கத்தினை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் கடுமையாக தாக்க துவங்கியது. எனக்குள் இருந்த உயிர் பயம், சண்டையிட என்னை மேலும் தயார்படுத்தியது. பின்னர் அருகில் இருந்த பாறையில் சிங்கத்தை மோதினேன்.
இதனையடுத்து சிங்கத்தை காலின் அடியில் போட்டு, கழுத்து பகுதியில் காலை வைத்து நெறித்தேன். இறுதியில் சிங்கம் இறந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக இந்த மலைச்சிங்கங்கள் அமைதியான குணநலன் கொண்டவை. கடந்த சில ஆண்டுகளாக இவை மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என கொலராடோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விலங்குகளின் வாழ்விடங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வதாலும், அந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடுவதாலும் மனிதர்களை விலங்குகள் தாக்குவதாக கூறுகின்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பின்னர், லாரிமர் கவுன்டியின் இயற்கை வளத்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #USmanKilledLion
ஜகார்தா:
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய 11-வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது. டிரிபிள் ஜம்பில் அர்பிந்தர்சிங்கும், ஹெப்படத்லானில் சுவப்ன பர்மனும் தங்கம் வென்றனர். 200 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த் வெள்ளியும் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையில் தமிழக வீரர் சரத்கமல்-மனிகா பத்ரா ஜோடிக்கு வெண்கலமும் கிடைத்தது.
நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 54 பதக்கம் பெற்றுள்ளது.
தடகள போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இதில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான வட்டு எறிதல் பந்தயம் இந்திய நேரப்படி இன்று மாலை 5.10 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சீமாபுனியா, குமாரி சந்தீப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இருவரும் பதக்கம் பெற்று தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீமா புனியா கடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார். காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றுக் கொடுத்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 5.50 மணிக்கும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 6.05 மணிக்கும் நடக்கிறது. இந்தியா சார்பில் சித்ரா உன்னிகிருஷ்ணன் மோனிகா சவுத்ரி மற்றும் மஞ்ஜித்சிங், ஜின்சன் ஜான்சன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்
மஞ்சித்சிங் தகுதி சுற்றில் முதலிடமும், ஜின்சன் 2-வது இடமும் பிடித்தனர். இதனால் இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் 800 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் (தங்கம், வெள்ளி) பெற்றுக் கொடுத்து இருந்தனர்.
5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் கோவிந்த் கலந்து கொள்கிறார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அவர் வெண்கல பதக்கம் பெற வேண்டியது. விதி முறை மீறலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் பறிபோனது. இதனால் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலாவது பதக்கம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் 6.50 மணிக்கும், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் இரவு 7.15 மணிக்கும் நடக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணி பங்கேற்கிறது. தொடர் ஓட்டத்திலும் பதக் கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட களத்தில் இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி ஆக மொததம் 14 பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018