search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athletics competition"

    • அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
    • 200 மீட்டர் ஓட்டத்தில் 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ஏ.ராஜராஜன் நாடார் மகள் ஆர்.அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற 38-வது தேசிய இளையோருக்கான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 1,000 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில் 2012-ம் ஆண்டு 24.28 வினாடிகளில் கடந்த சாதனையை தற்போது 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாணவி ஆர். அபிநயா நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைமை அலுவலகத்திற்கு சென்று நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். மாணவியை, சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், துணை செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.வைத்திலிங்கம் நாடார், எஸ்.காமராஜ் நாடார், எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர் நாடார், பி.ரகுநாதன் நாடார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

    • மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர், 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.
    • தாயம்மாள் மினி மாரத்தானில் வெள்ளி வென்றார்.

    நெல்லை:

    அண்ணா பல்கலைக் கழகம் மண்டலம் நெல்லை சார்பில் சிவகாசி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் மகளிருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.

    இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர் மற்றும் 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.

    மாணவி ஜெயா மிஸ்பா 400 மீட்டர் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர், 40x400 ரிலேவில் தங்கமும் வென்றார். மாணவி ஜென்னி மார்க்ஸ் 100 மீட்டரில் தங்கம் ,100 மீட்டர் தடை தாண்டுதல், 4x100 ரிலே ஆகியவற்றில் தங்கம் வென்றார்.

    தாயம்மாள் 5 ஆயிரம் மீட்டர், 4x400 மீட்டர் ஆகியவற்றில் தங்கம், மினி மாரத்தானில் வெள்ளி வென்றார். மாணவி போஜாக்ஸியோ 4x400 ரிலேவில் தங்கமும், மான்யா நீளம் தாண்டுதலில் வெள்ளியும், 4x100 ரிலேவில் தங்கமும் வென்றனர்.

    மாணவி காரிய லட்சுமி தேவி 100 மீட்டரில் வெண்கலமும், 100 மீட்டரில் வெள்ளியும், 4x100 ரிலே தங்கமும் வென்றார். இன்பான்ட் நிவானா 400மீட்டர், 800 மீட்டர், 4x400 ரிலேவில் தங்கமும் வென்றர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

    போட்டியில் வெற்றி பெற பயிற்சி அளித்த எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகரியா கேப்ரியல், உடற் கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், எஸ்தர் ராணி, நாராயணன் மற்றும் மாணவிகளை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் ப்ரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்றனர்.
    • மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 88 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்களில் மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

    மாவட்ட அளவிலான இந்த போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடை பெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வரும், நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.

    ஊத்துக்குளி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகள் விஜயமங்கலத்தில் உள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இளையோர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.

    மேலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதே போல் இதே பிரிவில் மாணவி ஆர். பிரியதர்ஷினி வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    இவர்களை பள்ளியின் தாளாளர் கே.சந்திரகலா, தலைவர் பி.கருப்பண்ணன், செயலாளர் கே.வினோதினி,முதல்வர் டாக்டர் கே.ஹரிதேவன், உடற்கல்வி ஆசிரியர் பி.கதிரவன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள்,மாணவ-மாணவிகள் வெகுவாக பாராட்டினர்.

    • வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • தடகள் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் வட்டார பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையிலான குழு மற்றும் தடகள போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆடவர் மற்றும் மகளிருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

    டி.டி.என். கல்வி குழு மத்தின் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கி போட்டிகளை தொடக்கி வைத்தார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை உரை யாற்றினார். தொடர்ந்து மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளாடிஸ் லீமா ரோஸ் தேசிய கொடியையும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் கொடியை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் மற்றும் ஒலிம்பிக் கொடியினை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் ஏற்றினர்.

    குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், ராதாபுரம் குறு வட்டார செயலாளருமான பெஞ்சமின் வரவேற்று பேசினார். வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் வாழ்த்தி பேசினார். ஆண்களுக்கான தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி பெற்றது.

    2-வது இடத்தை இடிந்தகரை பிஷப்ரோச் மேல்நிலைப்பள்ளியும், 3-வது இடத்தை திசையன் விளை பொதிகை பப்ளிக் மேல்நிலைப்பள்ளி அணியும் பெற்றது. மகளிருக்கான தடகள் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட த்தை கூடங்குளம் ஹார்வர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெற்று சென்றது. 2-வது இடத்தை திசையன்விளை ஹோலி ரெடிமேர்ஸ் மேல்நி லைப் பள்ளியும், 3-வது பரிசை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியும் பெற்றது.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற தடகள் போட்டியில் 35 பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாட்டி னை ஹை-டெக் பாலி டெக்னிக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது.
    • தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இ-குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதற்கு கலை கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டி தொடங்கியது.

    இந்த போட்டியில் 60 பள்ளிகள் கலந்து கொண்டன. முடிவில் மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.

    தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி மாணவர்களை உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்,சோலைமலை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.பின்னர் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.

    • திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப்போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சண்முகம்உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், 10ம் வகுப்பு மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் பரிசும், 10ம் வகுப்பு மாணவி பவித்ர லட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம்பரிசும் பெற்று மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தேசிய அளவிலான தடகள போட்டியில் ப்ரண்ட்லைன்மிலேனியம் பள்ளி மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல்போட்டியில் 1.78மீ தாண்டி தேசிய அளவில் நான்காமிடம் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி,இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • தூத்துக்குடி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் வேலவன் வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சுப்பையா வித்யாலயா பள்ளி முதல் இடத்தை பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் வேலவன் வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் வேலவன் வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர்கள் தங்கவேல், அன்னபுஷ்பம் மற்றும் பள்ளித் தாளாளர் ஆனந்த் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி அதிஷ்டராஜ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், அன்னை ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    நீலா சீபுட்ஸ், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, அன்னை ஜூவல்லர்ஸ் இப்போட்டி நடத்துவதற்கு பெரும் பங்களித்தனர். போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சுப்பையா வித்யாலயா பள்ளி முதல் இடத்தை பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.

    தனிப்பட்ட வெற்றியாளருக்கான ஆண்கள் பிரிவில் முதல் பரிசை செயிண்ட் ஆன்ஸ் பள்ளியின் மாக்வின் ராய், 2-ம் பரிசை முறையே செயின்ட் தாமஸ் பள்ளியின் ஜெஸ்வின் பால் பெற்றனர்.

    பெண்கள் பிரிவில் முதல் பரிசை செயின்ட் ஆன்ஸ் பள்ளியின் மது ரனிகா, 2-ம் பரிசை ஹோலி கிராஸ் பள்ளியின் ரேணுபாலா முறையே பெற்றனர். போட்டிகள் அனைத்தையும் சகிலா ஆனந்த் மேற்பார்வையில், வேலவன் வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள், ஆசரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    காங்கயம் :

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கயம் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர் பழனிச்சாமி, மோகனசுந்தரம், சாவித்திரிசுப்ரமணியம், முதல்வர் சுப்ரமணி,பள்ளியின் தாளாளர்,அகடமிக் டைரக்டர்ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • தடகள போட்டிகளில் சுமார் 56 பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன் உள்பட பலரும் பாராட்டினர்

    நெல்லை:

    நெல்லை குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 56 பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மாணவிகள் பிரிவில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா 5 தங்கம், மாணவி ரம்யாசெல்வி 2 தங்கம், 3 வெள்ளி, மாணவி ரெனிஷாசரின் 4 தங்கம், மாணவி உஷா 1 தங்கம், மாணவி ஷிரேயா பாலா 4 தங்கம் 1 வெள்ளி, மாணவி சுமிதா 1 தங்கம் 1 வெள்ளி, மாணவி பிரியா 1 வெள்ளி பதக்கம் வென்றனர்.

    மாணவர்கள் பிரிவில் மாணவன் சஞ்சீவ் ராம் 2 தங்கம், மாணவன் ஸ்ரீகாந்த் 4 தங்கம், மாணவன் சுடலை 4 தங்கம், மாணவன் தனுஷ் ஜெட்சன் 2 தங்கம் 1 வெள்ளி, மாணவன் சஞ்சய் 1 தங்கம், மாணவன் பார்வதி கிருஷ்ண லோகேஷ் 1 வெள்ளி, மாணவன் கணேஷ் கார்த்திக் 1 தங்கம், மாணவன்முஹம்மது நதீம் 1 வெண்கலம், மொத்தம் 22 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன் பள்ளியின் தாளாளர் முனைவர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன் குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • போட்டியில் சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குழந்தைகளுக்கான தடகள போட்டி நடந்தது.போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் கல்யாணி, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பங்கேற்றார். இந்த போட்டியில் 27 பள்ளிகள் மற்றும் கிளப்களில் இருந்து சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடுமலை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு கலைக் கல்லூரி உடற்கல்வித்துறை, லயன்ஸ் கிளப் ,தேஜஸ் ரோட்டரி இணைந்து செய்திருந்தனர்.

    ×