என் மலர்
நீங்கள் தேடியது "ATM Machine breaking"
- திண்டிவனம் அருகே ஏ.டி.எம். மிஷினை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அங்குள்ள அரசு வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம். மிஷினை மர்ம நபர் ஒருவர் உடைத்ததாக பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையின் மூலம் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராஜபா ளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 32) என்பதும், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மை யத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சி செய்த போது ஏ.டி.எம். மிஷினில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்து ஏ.டி.எம். மிஷினை உடைத்ததாகவும், தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார்.
- இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மை யத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார். ஏ.டி.எம் மெஷினை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துள்ளார்.
தொடர்ந்து, அங்குள்ள இ-சர்வைலன்ஸ் கருவி மூலம் வங்கி மேலாளர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஸ்ரீதர் வங்கி ஊழியர்கள் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏ.டி.எம் உடைக்கப்பட்டு இருந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.