search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auckland Eden park cricket stadium"

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகழ்பெற்ற மைதானமாக ஈடன் பார்க்கை கைவிட்டு புதிய கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்கிறது. #nz
    கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று நியூசிலாந்து. இதுவரை உலகக்கோப்பை தொடரை வென்றது இல்லை என்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    நியூசிலாந்தில் உள்ள முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆக்லாந்து ஈடன் பார்க். 1930-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. நியூசிலாந்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஆக்லாந்தில் அமையப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 41 ஆயிரம் ரசிகர்கள் நேரில போட்டியை கண்டு ரசிக்கலாம்.



    தற்போதைய நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு இவ்வளவு ரசிகர்களை மைதானத்திற்கு வருவது அரிதாக உள்ளது. இதனால்  நியூசிலாந்து அணி அதிக செலவை சந்திக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு, மைதானம் பராமரிப்பு ஆகியவற்றிற்கு செலவழிக்கும் பணத்தை திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நிதிச்சுமை காரணமாக மிகப்பெரிய மைதானமாக ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தை வெஸ்டர்ன் ஸ்பிர்ங்ஸ் ஸ்டேடியத்திற்கு மாற்ற நியூசிலாந்து முடிவு செய்தது. ஈடன் பார்க்கில் 2006-ல் இருந்து மூன்று டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×