search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi Amavasai"

    • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
    • ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    திருச்சி:

    தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மே ற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். மேலும் காவிரியில் தற்போது தண்ணீர் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு செல்வதால் ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

     தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும் மண்டப கரைகளில் அமரவைக்கப் பட்டனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்ட னர்.

    திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    காவிரி கரைகளில் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இதனால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நள்ளிரவு முதலே தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வருகை தந்ததால், அப்பகுதியில் எந்த விதமான அசம்பா விதமும் ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு இருந்தது.

    மேலும், இருசக்கர வாகனம் மட்டுமே அம்மா மண்டபம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. கார், வேன், ஆட்டோ போன்ற எந்த வாகனங்களையும் அம்மா மண்டபம் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பாக, சாலையில் முழுவதும் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமரா அமைத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக, ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொதும க்களுக்கு அறிவு ரைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டு வருகிறது.

    காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் அம்மா மண்டபத்தில் அமைக் கப்பட் டிருந்த தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மற்றொரு புறம் தடுப்புக்கட்டைகள் கட்டி அதில் நீராட அனுமதிக்க ப்பட்டனர்.

    தர்ப்பணம் கொடுத்தவர் கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலா ண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    கரூர் மாவட்ட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் நெரூர், மாயனூர், வாங்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலை முறை முன்னோ ர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர்.

    அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு முன்னோர்களை வணங்கி சென்றனர். பின்னர் அவர்களின் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

    • வருகிற 17-ந் தேதி மற்றும் ஆகஸ்ட்டு 16-ந் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 17-ந் தேதி மற்றும் ஆகஸ்ட்டு 16-ந் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை முன்னிட்டு முக்கிய கோவில்களான அழகர்கோவில், அணைப்பட்டி, அனுமார்கோவில், ஆத்தூர் சடையாண்டி கோவில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில், தேனி உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில்,

    ராஜபாளையம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் குச்சனூர் ஆகிய கோவில்களுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, தேனி, சின்னமனூர், கம்பம், தேவாரம்,

    போடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கோவில் தலங்களில் பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

    • ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் 1,140 பேர் பயணம் செய்தனர்.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவ லகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு இன்று (28-ந்தேதி) முன்பதிவு இல்லாத சிறப்பு ெரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட இந்த ெரயில், காலை 9.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்ற டைந்தது.

    இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்றது.

    மதுரை-ராமேசுவரம் ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் மொத்தம் 1,140 பேர் பயணம் செய்தனர். இதன்மூலம் ரூ.72 ஆயிரத்து 700 கட்டணம் வசூலானது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×