என் மலர்
நீங்கள் தேடியது "australia open tennis"
- இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.
- கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வந்தது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.
இந்த ஆட்டத்தில் சின்னெர் 6-3, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் உலகின் நம்பர் ஒன் வீரரான சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரித்வி சேகர் 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஆலிவர் கிரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- தொடரில் 2வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில், காது கேளாதோருக்கு நடத்தப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பிரான்சின் ஆலிவர் கிரேவ் உடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பிரித்வி சேகர் 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஆலிவர் கிரேவை வீழ்த்தி தொடர்ந்து 2வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார்.
காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கடந்தாண்டும் பிரித்வி சேகர் தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
