search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian Open 2025"

    • முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
    • மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ ஆகியோர் மோதினர்.

    ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' ஆன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.

    இதில் முதல் செட்டை கோகோவிச் 4-6 என இழந்தார். அடுத்த மூன்று செட்டுகளை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பானிஷ்) அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ (கஜகஸ்தான்) ஆகியோர் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.

    ×