search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian Open Badminton"

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் பிரனாய் ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, சீன தைபே வீரரான சி.ஒய். லின் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் 12-21, 13-21 என்ற கணக்கில் சமீர் தோல்வியடைந்தார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் இந்தியாவின் பிரனாய், சீனாவின் வெங் ஹாங் யாங் மோதினர்.
    • இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி சீனாவின் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.

    முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிரனாய் 23-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தனதாக்கினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை வெங் ஹாங் யாங் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார். அத்துடன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ரஜாவத் ஆகியோர் அரையிறுதியில் மோதினர்.
    • இதில் எச்.எஸ்.பிரனாய் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

    இதில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சீன வீரரான வெங் ஹாங் யாங்கை எதிர்கொள்கிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ரஜாவத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

    இதில் ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு வீரரான இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜிங்டிங்கை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-10, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சு லி யாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 19-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சி யூ ஜென்னை வீழ்த்தி காலிறுதியை எட்டினார்.

    இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை விரட்டியடித்தார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-10 என்ற நேர்செட்டில், சக நாட்டு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், பிரனாய், பிரியான்ஷூ ரஜாவாத் ஆகிய இந்தியர்களும் களம் இறங்குகிறார்கள்.
    • முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார்.

    சிட்னி:

    மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத் தொகைக்கான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார்.

    கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சிந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், பிரனாய், பிரியான்ஷூ ரஜாவாத் ஆகிய இந்தியர்களும் களம் இறங்குகிறார்கள்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்த சீசனில் 4 பட்டங்கள் வென்று அசத்திய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு (ஆக.21-27) தயாராகும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறது.

    ×