என் மலர்
முகப்பு » AUSvBAN
நீங்கள் தேடியது "AUSvBAN"
வங்காள தேச அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்த தொடரை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. #AUSvBAN
வங்காள தேச அணி இந்த வருடம் மத்தியில் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. 2003-ம் ஆண்டுக்குப்பின் தற்போதுதான் வங்காள தேசம் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வகையில் ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில் அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் வங்காள தேசம் இடையிலான தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவில் முக்கியமான கால்பந்து தொடர் நடைபெற இருப்பதாகவும், இதனால் போட்டி ஒளிப்பரப்பு உரிமையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் தொடரை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு நாங்கள் சில ஆப்சன்களை முன்மொழிந்துள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா முடிவால் வங்காள தேசத்திற்கு சுமார் 15 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா சென்ற விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

×
X