என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "auto driver escape"
தருமபுரி:
தருமபுரி காந்தி நகர் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் பிரகதீஸ்வரன் (வயது 14). இவன் காந்திநகர் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும். மாணவன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் உங்கள் உறவினருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மாணவரை ஆட்டோவில் அழைத்து சென்றார்.
பின்னர் ஆட்டோ டிரைவர் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவனின் தந்தை ராஜாவிடம் பேசினார்.
உங்கள் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினான். இந்த பேச்சை கேட்ட மாணவன் வெங்கடம்பட்டி அருகே ஆட்டோ சென்ற போது அதில் இருந்து குதித்து ஊருக்குள் சென்று, அந்த பகுதி மக்களிடம் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்தி வந்ததாகவும், அதில் இருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறினார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் மாணவனை கடத்திய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள். மாணவனிடமும் விசாரணை நடந்து வருகிறது.