search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avesh Khan"

    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும்.
    • எனினும், ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தது.

    2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது குரூப் சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவில் விளையாடி வருகிறது. அடுத்து சூப்பர் 8 சுற்று முழுவதும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற இருப்பதால் இந்திய அணி அங்கு செல்ல உள்ளது. அமெரிக்காவில் இந்திய அணியின் கடைசி போட்டியில் கனடா அணிக்கு எதிராக நாளை விளையாட உள்ளது.

    இந்த நிலையில் அணியில் இருக்கும் நான்கு மாற்று வீரர்களில் சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கானை மட்டும் இந்தியாவுக்கு கிளம்பிச் செல்லுமாறு பிசிசிஐ கூறியுள்ளது. மற்ற இரண்டு மாற்று வீரர்களான ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது இந்திய அணியுடன் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும். எனினும், ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தது. இந்திய அணியும் நான்கு மாற்று வீரர்களை அறிவித்தது.

    அதில் தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுக்கு தேவை இல்லை என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். மாற்று துவக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே, நான்காவது வீரராக இருக்கும் சுப்மன் கில்லை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    மேலும், வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள பிட்ச்கள் அனைத்தும் மந்தமானவை என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அங்கு அதிக வேலை இல்லை. ஏற்கனவே, 15 பேர் கொண்ட அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் ஹர்திக் பாண்டியாவும் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். மாற்று வீரர்களில் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது இருக்கிறார். எனவே, ஆவேஷ் கானை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • ஆர்சிபி அணிக்கெதிராக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 27 ரன்கள் விட்டுக்கொடுதது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குஜராத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணியால் 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதற்கு ஆவேஷ் கானின் பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ரஜத் படிதார் (34), லோம்ரோர் (32), தினேஷ் கார்த்திக் (11) ஆகியோரை வீழ்த்தினார்.

    அதேபோல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் குவாலிபையர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் பந்து வீச்சில் அசத்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    நிதிஷ் ரெட்டி (5), அப்துல் சமாத் (0), ஷபாஸ் அகமது (18) ஆகியோரை வெளியேற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை 175 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

    முக்கியமான இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • 9-வது விக்கெட்டுக்கு பட்லர்- ஆவேஷ் கான் ஜோடி 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
    • இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் குவித்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20-வது ஓவர் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    ராஜஸ்தான் அணி 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது பட்லருடன் ஆவேஷ் கான் ஜோடி சேர்ந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ஆவேஷ் கான் ஒரு பந்து கூட சந்திக்காமல் கடைசி வரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார். ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பட்லர் பார்த்துக் கொண்டு ஆடினார்.

    9-வது விக்கெட்டுக்கு இவர்களது பார்ட்னர்ஷிப் 38 ரன்கள் ஆகும். இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறைக்கு வீரர்கள் சென்றனர். அந்த வகையில் ஆவேஷ் கானுக்கு சென்றார். அப்போது அவருக்கு ராஜஸ்தான் அணி சார்பில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் சீனியர் வீரரான முகமது சமி இடம் பிடித்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் இந்த தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் இந்த தொடரில் இணைந்துள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.

    • நான் களத்தில் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை போட்டி முடிந்த பின்னர் தான் உணர்ந்தேன்.
    • இருந்தாலும் அதற்காக நான் வருந்துகிறேன்.

    நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    15-வது லீக் போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னோ. கடைசிப் பந்தில் இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்தது. ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் பை ரன் எடுத்து லக்னோ வெற்றி பெற்றது. அப்போது ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கான் இருந்தார்.

    அந்தத் தருணத்தில் களத்தில் இருந்த ஆவேஷ் கான், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை தரையில் வீசி இருந்தார். இந்நிலையில் தற்போது அது குறித்து ஆவேஷ் கான் மனம் திருந்து பேசியுள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    நான் களத்தில் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை போட்டி முடிந்த பின்னர் தான் உணர்ந்தேன். அது அந்த தருணத்தில் நடந்தது. அவ்வளவு தான். இருந்தாலும் அதற்காக நான் வருந்துகிறேன்.

    அண்மையில் முடிந்த சீசன் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருந்தாலும் 10 ரன்களுக்கு குறைவான எக்கானமி ரேட், 4 அல்லது 5-வது ஓவரை பவர்பிளே ஓவர்களின் போது வீசியதும், டெத் ஓவர்களும் வீசி இருந்தேன்.

    என ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

    ×