search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinasi linkeshwara temple"

    • அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • கோபுரத்துக்கு வர்ணம் தீட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

    அவிநாசி : 

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இக்கோவிலில் மார்ச் 13-ந்தேதி ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் ராஜகோபுரத்துக்கு, கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளை சார்பில் திருப்பணி செய்வதற்கான பாலாலய பூஜைகள் நடந்தன. அதன்பின் கோபுரத்துக்கு வர்ணம் தீட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

    தற்போது வர்ணம் தீட்டும் பணிகள் மற்றும் சுதை சிற்பங்கள் மராமத்து பணிகள் முழுமை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, ஏழு நிலை ராஜகோபுரத்துக்கு, வர்ணம் தீட்டும் பணிகளும், சுதை சிற்பங்களை மராமத்து செய்யும் பணிகளும் துவங்கியுள்ளன.இதுதவிர கோவில் உள்பிரகாரத்தில் உள்ள பரிவார சன்னதிகளின் விமானங்களுக்கு மராமத்து பணிகள் முடிந்து வர்ணம் தீட்டும் பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் கும்பாபிஷேகத்துக்கான தேதி அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    ×