என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » awareness முதலமைச்சர் நாராயணசாமி
நீங்கள் தேடியது "awareness முதலமைச்சர் நாராயணசாமி"
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். #narayanasamy
புதுச்சேரி:
புதுவை அரசு சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த 6 விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுவை பகுதியில் 3, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கு தலா ஒரு வாகனம் மூலம் 10 நாளைக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர்.
இந்த பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்- அமைச்சரின் பாராளு மன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், துணை இயக்குனர் டாக்டர் ரகு நாதன், உதவி இயக்குனர்கள் சுந்தரராஜன், கணேசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். #narayanasamy
×
X