என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Awareness Seminar"
- உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
வேலூர்:
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சென்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தி ல்வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக டீன் சி. தண்டபாணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.பாபு ஜனார்த்தனம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜே.மாதவன், முன்னாள் பதிவாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.விஜய்ஆனந்த் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
- முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.
திருப்பூர்:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக மனநல தின விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவா் சஞ்சய் பேசியதாவது:-
ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும். மனமும், உடலும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றின் பாதிப்பு மற்றொன்றையும் பாதிக்கும்.
போதைப்பொருள்கள் பயன்படுத்துவது, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது. மக்களிடம் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மனநலக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல தினம் உருவாக்கப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டவா் குறித்த விவரங்கள் தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கும், மனச்சோா்வு உள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து 14416 என்ற எண்ணிற்கும் தகவல் தர வேண்டும் என்றாா்.பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, தினேஷ்கண்ணன், சிரஞ்சீவி, சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்களுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு உதவுவேன், மனநலம் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.
- நீதிமன்ற பணியாளர்களுக்கு பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.
- வழக்கறிஞர்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், திருப்பூர் முதன்ைம மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன்குழு மற்றும் நிறங்கள் அமைப்பு சார்பில் நீதிமன்ற பணியாளர்களுக்கு பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி வரவேற்றார். மாவட்ட விரைவு மகிளா நீதிபதி பாலு முன்னிலை வகித்து பேசுகையில், சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வழங்கப்படும் சமத்துவம் மூன்றாம் பாலினத்தவருக்கும் நாம் வழங்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை சக மனிதர்கள் போல் நடத்த வேண்டும் என்றார்.மாவட்ட குடும்பநல நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன்குழு தலைவருமான சுகந்தி மற்றும் கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறங்கள் அமைப்பின் இணை நிறுவனர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் டெல்பினா, நவீன்குமார் ஆகியோர் 3-ம் பாலினத்தவர்களில் உள்ள வேறுபாடுகள் குறித்தும், அவர்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்பட பல விவரங்கள் குறித்து விளக்கினர்.முடிவில் நீதித்துறை நடுவர் முருகேசன் நன்றி கூறினார். இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, வழக்கறிஞர்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- இளம் வயது திருமணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
- கருத்தரித்தலால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளின் புள்ளிவிவரங்களை தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் ஆயம், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம், தஞ்சாவூர் இணைந்து "இளம் வயது திருணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு" கருத்தரங்கம் நடத்தியது.
இந்நிகழ்வுக்குக் கல்லூரி முதல்வர்ஜான்பீட்டர் தலைமை தாங்கினார்.மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் முன்னிலை வகித்தார். கருத்தாளர்களாக, மருத்துவர் ராஜராஜேஸ்வரி, மகப்பேறுத்து றைத்தலை வர், மருத்துவர் உதயா அருணா, மகப்பேறு இணைப்பேராசிரியர்,பிலாமினோ சாந்தினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பிரபா, ஒருங்கிணைந்த சேவை மையம் குழந்தை வளர்ச்சி அலுவலர்,கோடீஸ்வரன் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் போன்றோர் கலந்து கொண்டு இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்தும் சிக்கலையும், அதனால் வரும் கருத்தரித்தலால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவு களையும், பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டி யதையும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வினை, முனைவர்கண்ணம்மாள் ஒருங்கிணைத்தார். முடிவில் வீரமணி நன்றி கூறினார்.
- சாரதா மகளிர் கல்லூரியில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகாதாரத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்கினார்.
நெல்லை:
பாளை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி யில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுடனும், இயக்குநர் சந்திரசேகரன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நலப்பணிகள் இணை இயக்குநர் லதா தலைமை உரை ஆற்றினார்.
மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகா தாரத்தை எவ்வாறு பாது காப்பது குறித்த விழிப்பு ணர்வை மாண வர்களுக்கு வழங்கினார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கனகா, பெண்கள், சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி மாணவி ஸ்ரீசங்கினி மக்கள் தொகை பெருக்கமும் வருங்கால இந்தியாவும் என்ற தலைப்பில் தனது கருத்துகளை பகிர்ந்தார். மாவட்ட விரிவாக்க கல்வி யாளர், மாவட்ட குடும்பநல இயக்ககம் ஜெயசித்ரா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களும், பேராசிரி யர்களும் கலந்து கொ ண்டனர். நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பொருளியல்துறை மற்றும் வணிக நிர்வாகத் துறை பேராசிரியைகள் இணைந்து செய்திருந்தனர்.
- சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
- மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான ஆசிரியர்கள் திகழ வேண்டும்
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஸ்காட் கல்வி குழும நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்கப்படுத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.
தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'ஆசிரியர் பணியே சிறந்தது' என்ற தலைப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாணவ செல்வங்களை சிற்பிகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் சிறப்பான பங்கை, சாதனை படைத்த ஆசிரியர்களின் வரலாற்றை குறும்படம் மூலம் ஆசிரியர்களுக்கு காட்டினார். சமூகத்தில் மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான அஸ்தி வாரமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்று தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபால்ராயன், பாலாஜி, கல்லூரி முதல்வர்கள் ஜஸ்டின், ஜாஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும்
எப்.எக்ஸ்.ஸ்காட் பாலி டெக்னிக், பி.எட். ஐ.டி.ஐ. நிறுவனம் மற்றும் எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளி, குட் ஷெப்பர்ட் பள்ளி முதல்வர்கள் பேராசிரி யர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.
- ஆயுர்வேதிக் மருத்துவ முறையின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- ஆயுர்வேதிக் மருத்துவ முறைகளும் எவ்வாறு நிரந்தரமாக சரி செய்வது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓரியண்ட்ஸ் குளோப் மார்க்கெட்டிங் சார்பில் சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவ முறையின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இதில் ஓரியண்ட்ஸ் ப்ளூ மார்க்கெட்டிங் ஆலோசகர்கள் ரவி, ரவிச்சந்திரன், ரவிசங்கர், விஜயநிர்மலா, சிவராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கொரோனா காலகட்டத்தில் இருந்து சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவம் பொது மக்களை எவ்வகையில் பாதுகாத்தது என்பது குறித்தும், தற்பொழுது மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் நீரிழிவு நோய், உடல் வெப்பம், உடல் சோர்வு போன்ற பல பல நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது, வந்த பின்னால் ஆயுர்வேதிக் மருத்துவ முறைகளும் எவ்வாறு நிரந்தரமாக சரி செய்வது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர்.
இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.
- புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நடைபெற்றது.
- டாக்டர் அபிராமி மற்றும் டாக்டர் பாண்டிச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
நெல்லை:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நடைபெற்றது. இதில் வாசுகி வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப்பின் நைனா முகம்மத், ரோட்டரி கிளப்பின் தலைவர் ஹாஜி இப்ராகிம் அறிமுகவுரை ஆற்றினார். நெல்லை கேன்சர் கேர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.முருகன் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, தனி மனித ஒழுக்கம் மற்றும் சமூக சுய கட்டுப்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். டாக்டர் எம்.அபிராமி மற்றும் டாக்டர் பாண்டிச்செல்வி சிறப்புரையாற்றினார். புற்றுநோய்களின் வகைகள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர், திட்ட அலுவலர்கள் சென்றாய பெருமாள், பேராசிரியர் லெனின் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- புகையிலை உபயோகிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
- இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினா்.
அவிநாசி :
சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் புகையிலையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
அவிநாசி வட்ட சட்டப் பணிக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட குற்றவியல் நீதிபதி சபீனா, மதுபோதை மற்றும் புகையிலை உபயோகிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
வக்கீல் சங்கத் தலைவா் ஈசுவரன் வாழ்த்துரை வழங்கினாா். சங்கச் செயலாளா் சாமிநாதன், ராஜாராம் ஆகியோா் இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினா்.
இதில், சேவூா் காவல் உதவி ஆய்வாளா் கலாமணி, காவலா் வெள்ளியங்கிரி, ஆசிரியா்கள் தனசேகரன், ராஜசேகரன், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
- சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடக்கிறது.
- தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஊட்டி,
ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் கர்ப்பப்பை நீர்க்கட்டி பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் மற்றும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் மூலிகை மருந்துகள் மற்றும் மருந்தியல் துறை சார்பில் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் தலைமை தாங்கினார். டாக்டர் சண்முகம், டாக்டர் ஷங்கர், டாக்டர் பிரியங்கா துவாரம்புடி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். கல்லூரி இணை பேராசிரியர் அருண் அனைவரையும் வரவேற்றார். இதில் தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை தலைவர் சண்முகம், லக்னோ மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர். ராஜேஷ் குமார் ஜா, முதன்மை விஞ்ஞானி மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி டாக்டர் நசீம் ஏ.சித்திகி, சமூக சேவகர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், போஸ்டர் மற்றும் ஆயுவுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டது. விழாவின் நிறைவில் சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மகளிர் மேம்பாட்டுஅமைப்பின் சார்பாக பெண்களின் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஸ்மிதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளமைப் பருவ மாற்றங்கள் குறித்தும், பெண்களின் சுகாதாரம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
வள்ளியூர்:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மகளிர் மேம்பாட்டுஅமைப்பின் சார்பாக பெண்களின் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்மிதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளமைப் பருவ மாற்றங்கள் குறித்தும், பெண்களின் சுகாதாரம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி பொன் லட்சுமி தலைமை தாங்கினார். தாளாளர் தேவிகா பேபி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்