என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby john"

    • இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.
    • தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயரித்துள்ளது.

    இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பேபி ஜான் படத்தின் 'நைன் மடாக்கா' மற்றும் பிக்லி பாம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரெய்லர் கடைசியில் சல்மான் கானுடன் சண்டையிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார். கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார்.இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அடுத்ததாக அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற் பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    அப்படி ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியான கபில் ஷர்மா ஷோவில் படக்குழு கலந்துக் கொண்டனர். அதில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் , வாமிகா கலந்துக் கொண்டனர். அதில் கபில் ஷர்மா அட்லீயை பார்த்து " நீங்கள் ரொம்ப இளமையாக சிறு வயதிலேயே ஒரு மிக பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு பிரபலத்தை முதல் தடவை சந்திக்கும் போது உங்களை பார்த்து எங்கே அட்லீ? என்ற கேள்வி எழுந்துள்ளதா? என அவரின் உருவத்தை கேலி செய்யும் விதமாக கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்லீ " நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு புரிந்தது.. நான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். நான் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்-க்கு மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தான் என்னுடைய முதல் திரைப்படத்தை தயாரித்தார். அவர் என் தோற்றத்தை பார்த்து மதிப்பிடவில்லை. நான் கதை சொல்லும் திறனைப் பார்த்து தான் என் படத்தை தயாரித்தார். இந்த உலகம் ஒருவனை அவனின் உருவத்தை வைத்து மதிப்பிட கூடாது. அவனின் மனதை வைத்து மதிப்பிட வேண்டும்" என மாஸாக பதிலளித்து அரங்கை அதிர செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சல்மான் கானை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • தெறி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்தும் உள்ளார்.

    ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார்.

    கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார். இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இதற்கிடையே சல்மான் கானை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ஹிந்தியில் தெறி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்தும் உள்ளார். படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அட்லீ விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

    இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை இரண்டாம் பாகம் வெளியாக  உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.
    • பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார். கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார்.இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அடுத்ததாக அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சில நாட்களுக்கு முன் ப்ரோமோஷன் பணிகளின் போது கபில் ஷர்மா நிகழ்ச்சியில் அவரை உருவ கேலி செய்தனர் அதற்கு கொடுத்த பதில் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வட இந்தியாவில் போதிய திரையரங்குகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. விநியோகஸ்தர்கள் யாரும் போதிய திரையரங்களை கொடுக்க மறுக்கிறார்கள் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

    அட்லீ ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஆனாலும் ஒரு தயாரிப்பாளராக மாறும் அட்லீ-க்கு வட இந்தியாவில் நெருக்கடி ஏற்படுத்துகின்றனர். அட்லீயின் வளர்ச்சி பிடிக்காததால் இதனை செய்கிறார்களா? இல்லை தமிழ் ஆட்கள் உள்ளே வரக்கூடாது என செய்கிறார்களா? என தெரியவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.
    • பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில் நான் உங்களை நேசிக்கிறேன் என்ற சொல்லை மூன்று மொழிகளிலும் பேச கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்பொழு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.
    • பேபி ஜான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    திரைப்படத்தின் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பாடலான பீஸ்ட் மோட் பாடல் இன்று வெளியானது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புள்ளது.

    இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படக்குழு அனைவருக்கு வாழ்த்து தெரிவித்து திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி பேபி ஜான் திரைப்படம் வெளியானது.
    • இயக்குநர் ஏ.காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.

    இயக்குநர் ஏ.காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் நடிகர் விஜய் நடித்து வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி பேபி ஜான் திரைப்படம் வெளியானது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பேபி ஜான் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் படம் வெளியாகி மூன்று நாட்கள் முடியாத நிலையில், இதன் வசூல் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பேபி ஜான் திரைப்படம் ரூ. 11.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், வருகிற வாரயிறுதி நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் பாக்ஸ் ஆஃபீசில் பெரும் தொகையை பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×