search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badri Seshadri"

    • பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டிக்கிறது.
    • சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

    சென்னை:

    பதிப்பாளரும், மேடைப் பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரியை இன்று அதிகாலை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அவரை சென்னையில் கைது செய்து, 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து பத்ரி சேஷாத்ரி கைதுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டிக்கிறது.

    சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

    ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா? என்று பதிவிட்டுள்ளார்.

    ×