என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bail cancel
நீங்கள் தேடியது "bail cancel"
கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
நீலகிரி:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜரானபோது இருவருக்கும் ஜாமின் வழங்கியது.
இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இதற்கிடையே, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்ய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்தது. அத்துடன், உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
ஜாமீன் கண்டிஷன்படி காவல் நிலையத்தில் ஆஜராகாததால் மீண்டும் கைது செய்யப்பட்ட ரவுடி பினுவை அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #RowdyBinu
திருவள்ளூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது சக கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது பினு உள்ளிட்ட சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அம்பத்தூர் துணை ஆணையர் முன்பு பினு சரண் அடைந்தார். சிறையில் அடைக்கப்பட்ட பினு, ஜூன் மாதம் 21-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில தினங்களாக காவல் நிலையத்திற்கு வரவில்லை. எனவே, அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிக்கை அனுப்பினர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கூட்டாளிகள் 7 பேருடன் பினு பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பினுவையும், கூட்டாளிகளையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ரவுடி பினு மற்றும் கூட்டாளிகைள அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், ஜாமீன் நிபந்தனையை மீறியதால் நீதிமன்றத்தின் மூலம் பினுவின் ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #RowdyBinu

×

X