என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bakery Shop"
- அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
- வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திண்டிவனத்தில் பேக்கரி கடையை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
- கல்லாவில் இருந்த 75 ஆயிரம் பணம் சமோசா,உயர்தர கேக் வகைகள் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விழுப்புரம்:
திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் முருகன் (வயது44).இவர் திண்டிவனம் செஞ்சி ரோடு அருகே பாரதி வீதியில் சதீஷ் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் 3 நாட்களுக்கு முன்பு ஆடி கிருத்திகை முன்னிட்டு தனது சொந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அந்த கடையை மேலாளர் முருகன்பார்த்து வருகிறார்.இவர் வழக்கம் போல கடையை இரவு 10 மணிக்கு பூட்டிவிட்டு சென்ற மீண்டும் காலையில் வந்து பார்க்கும்போது சொட்டர் பூட்டு உடைக்கப்பட்டு ஸ்வெட்டர் திறந்து இருந்ததை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த 75 ஆயிரம் பணம் சமோசா,உயர்தர கேக் வகைகள் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மேலாளர் முருகன் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து திண்டிவனம் ஏ.எஸ்பி. அபிஷேக் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கொள்ளையர்கள் அங்கிருந்து சமோசா, பப்ஸ்,பாதாம் கேக், போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்