search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bakthi"

    • ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.
    • ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.

    வீடுகளில் பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய மந்திரம் இது.

    பூஜையை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற மந்திரமான,

    "யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்

    பசுமான் பவதி சந்திரமா வா அபாம் புஷ்பம்

    புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி

    ய ஏவம் வேத யோபாம் மாயதனம் வேத

    ஆயதனவான் பவதி"

    என்று சொல்லிக் கொண்டே மலர்களை போட்டு பூஜையை நிறைவு செய்வது நல்லது.

    மலர் யாகம், மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியோ, புஷ்பயாகமோ செய்யப்படுகின்ற போது இறைவன் அகமகிழ்ந்து வேண்டிய வரம் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை.

    ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.

    ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.

    சில நாட்களில் பற்றாக்குறையாகி விடும். சில நாட்களில் கிடைத்தும் திருப்தியாக இருக்காது.

    இது போன்ற குறைகள் நீங்குவதற்காக புஷ்ப யாகங்கள் செய்யப்படுகின்றன.

    அந்த சமயங்களில் உயர் ரக மலர்களைக் கொண்டு, ஆசார அனுஷ்டானமான வேத விற்பன்னர்களைக் கொண்டு, முதலில் மந்திரங்களைக் கொண்டு மலர்கள் அக்னிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் இறைவனது திருவடி தொடங்கி, திருமுடி வரை மலர்கள் சொரியப்படும். இது திருப்பதியில் மிக விசேஷம்.

    என்றாலும், இப்போது ஏராளமான ஆலயங்களில் பக்தர்களின் புஷ்ப கைங்கர்யத்தால் மிகச் சிறப்பாகவே புஷ்ப யாகங்கள் நடைபெறுகின்றன.

    தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    தெய்வங்களுக்கு செய்யும் பூஜையில் சகஸ்ர நாமம், அஷ்டோத்தரம் போன்ற அர்ச்சனைகள் செய்யும் போது, பூக்கள் குறைவாக இருக்கும்.

    அப்போது ரோஜாப்பூ சாமந்திப்பூ போன்ற பூக்களின் இதழ்களையே சிறிது சிறிதாக பிய்த்து அர்ச்சனை செய்யலாமே என்று தோன்றும்.

    ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது.

    தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அர்ச்சனை மந்திரங்கள் நிறைய பாக்கி இருந்து, அர்ச்சனை செய்ய பூக்கள் குறைவாக இருக்கும் போது கூட, முழுமையான ஒரே ஒரு பூவை கையில் வைத்துக் கொண்டு, பாக்கியுள்ள அனைத்து மந்திரங்களையும் சொல்லிவிட்டு, இறுதியில் அந்த ஒரே ஒரு பூவை தெய்வங்களின் பாதங்களில் சேர்த்து விடலாம்.

    இப்படி செய்வதால் ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒவ்வொரு பூவைப் பாட்டு அர்ச்சனை செய்த பலன் முழுமையாகக் கிடைக்கும்.

    • உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.
    • பிரமேசுரம் (தென்கரை) - பிரம,அக்னி, லட்சுமி,தேவ,சங்க,தாரா,வேத,வாயு,வன்னி,நரசிங்க தீர்த்தங்கள்.

    1. பொதியமலை - ஸ்ரீதர தீர்த்தம் முதல் துர்கா தீர்த்தம் வரை 18 தீர்த்தங்கள்.

    2. பாபநாசம் - முக்கூடல் தீர்த்தம்.

    3. திருமூல நகரம் (அம்பை, மேலப்பாளையம் வட்டாரம், திருமூலநாதர் கோவில்) - சாலா தீர்த்தம்.

    4. காசிபேசுரம் (அம்மைஎரிச்சாவுடையார் கோயில்) - காசிப தீர்த்தம், தீப தீர்த்தம்.

    5. திருக்கோட்டீச்சுரம் - முக்கூடல், கண்ணுவேசர், விசுவ, பிரம, சர்வ, தட்சிண தீர்த்தங்கள்.

    6. கரிகாத்தபுரி (அத்தாளநல்லூர்) - சித்த, மாண்டவ்ய, பிரமதண்ட தீர்த்தங்கள்.

    7. திருப்புடைமருதூர் -துர்கா தீர்த்தம், ரிஷி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்.

    8. பொருநையாற்றின் தென்கரையில் -சோம தீர்த்தம்.

    9. உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.

    10. துருவாச நகரம் (அரியநாயகிபுரம்) -துருவாச , காந்தர்வ தீர்த்தங்கள், பச்சையாறு, முக்கூடல்.

    11. மந்திரேசுரம் (ஓமனுவர்) - தேவதீர்த்தம், ருத்ர தீர்த்தம்.

    12. திரு அக்கினீச்சுரம் (தருவை)- அக்கினீச்சுர தீர்த்தம்.

    13. துர்கேசுரம் -துர்கா தீர்த்தம்.

    14. சிந்துபூந்துறைத் தீர்த்தம்.

    15. சிந்துபூந்துறைக்கு வடபால் -சப்தரிஷி தீர்த்தம்.

    16. சிந்துபூந்துறைக்கு கீழ்பால் -குட்டத் துறைத் தீர்த்தம்.

    17. ராமேசநல்லுவர் -ஜடாயு தீர்த்தம்.

    18. மணலுவர் (அ) மணவாள நல்லுவர்- மங்கள தீர்த்தம்.

    19. அழகர் கோயில் (சீவலப்பேரி)- முக்கூடல், பிதிர், கோதண்ட, தட்சிண, வியாக்ரம, வியாச தீர்த்தங்கள்.

    20. ஸ்ரீவைகுண்டம்- வைகுந்தத் தீர்த்தம்.

    21. காந்தீசுரம் -காந்தீசுரத் தீர்த்தம்.

    22. ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூர் -சக்கர, சங்க, பஞ்சகேத்ர தீர்த்தங்கள்.

    23. நவலிங்கபுரம் (பொருநை தென்கரை) - நவதீர்த்தம்.

    24. பிரமேசுரம் (தென்கரை) - பிரம, அக்னி, லட்சுமி, தேவ, சங்க, தாரா, வேத, வாயு, வன்னி, நரசிங்க தீர்த்தங்கள்.

    25. சோமேசுரம் (தென்கரை) - சோம தீர்த்தம்.

    26. திருச்செந்துவர் -சங்கமுகம்.

    27. சங்கமத் துறை -பொருநையாறு கடலில் கலக்குமிடம்.

    • தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.
    • திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.

    தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.

    இத்தலத்தில் மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள்

    பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர்.

    12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6-4-1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கிறது.

    அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    சங்கரன்கோவில்

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.

    நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர்.

    இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரைவில் நடைபெறும்.

    • காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.
    • தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.

    ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதத்தை தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் விரதத்தை பின்பற்ற வேண்டும்.

    நாக பஞ்சமி விரதம் ஏற்பட்டதற்கான புராண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:

    காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.

    தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.

    இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து, தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படி மகனுக்கு சாபம் கொடுத்தாள்.

    ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் எப்படி நிறைவேறியது என்பதை பார்க்கலாம்.

    பரிசட்த்து மன்னன் பாம்புகளின் தலைவனாக விளங்கிய "தட்சகன்" என்ற கொடிய நாகத்தால் கடிக்கப்பட்டு இறந்தான்.

    தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இணத்தையே அழிக்க உறுதி பூண்டான் பரிசட்த்தின் மகன் ஜனமேஜயன்.

    அதற்காக "சர்ப்பயக்ஞம்" என்ற வேள்வியை நடத்தினான்.

    பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன.

    அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்க்கு சாப நிவர்த்தி கொடுத்தார்.

    அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ஒரு பஞ்சமி தினமாகும்.

    எனவே இந்த நாக பஞ்சமி விரதம் ஆனி மாத சுக்லபஷ பஞ்சமியில் கொண்டாடும் வழக்கம் உள்ளது.

    இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

    புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

    விரதமுறை

    நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள்.

    பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள்.

    பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள்.

    மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.

    • மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
    • இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.

    சிவாலயங்களில் வழிபாடு செய்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது ஒரு புறம் அரச மரத்தடியை காணலாம்.

    அரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம்.

    பாம்புக்கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.

    பாம்புக்கல்லில் உள்ள பாம்பு போல தம்பதியர் இணைந்து, விநாயகரின் அருளாலும், வேப்பமரங்களின் மருத்துவ சக்தியாலும் மகப்பேறு பெறலாம் என்பது தத்துவம்.

    அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும்.

    திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று வழிபாடு செய்வது சிறப்பு உடையது.

    வழிபாடு செய்யும் பொழுது ஏழுமுறை வலம் வரவேண்டும். ஒரு சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    பாம்புக் கல்லைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால் முதல்நாள் அதை தண்ணீரில் மூழ்கி இருக்கச் செய்ய வேண்டும்.

    மகப்பேறு வேண்டி பிராத்தனை செய்து கொண்ட தம்பதிகள் அந்த குறிப்பிட்ட முதல் நாள் இரவு உணவு உட்கொள்ளக்கூடாது.

    மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.

    ராமேஸ்வரத்தில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை, செய்வது விசேஷம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் ஆலயத்தில் எண்ணற்ற பாம்புக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

    • இச்சிலையை வேளூர் மாரிச்செட்டியாரும் அவருடைய நண்பர் கந்தப்ப ஆச்சாரியும் நிறுவினர்.
    • அவர்கள் திருப்போரூர் சென்று கந்தபெருமானை வழிபடுவது வழக்கம்.

    சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது.

    இச்சிலையை வேளூர் மாரிச்செட்டியாரும் அவருடைய நண்பர் கந்தப்ப ஆச்சாரியும் நிறுவினர்.

    அவர்கள் திருப்போரூர் சென்று கந்தபெருமானை வழிபடுவது வழக்கம்.

    ஒரு முறை இது போன்று திருப்போரூருக்கு செல்லும் பொழுது அருகில் களைப்பாற ஒரு மரத்தடியில் படுத்தனர்.

    அப்போது, வேளூர் மாரிச்செட்டியார் கனவில் ஸ்ரீகந்தசாமி தோன்றி, தாம் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகவும்,

    தன்னை எடுத்துச் சென்னைக்கு சென்று நிறுவி கோவில் கட்டுமாறும் பணித்தார்.

    அவ்வாறு அவர்கள் இப்போது கந்தகோட்டம் உள்ள இடத்தில் குளித்துவிட்டு மீண்டும் சிலையை எடுக்க முயன்ற போது

    எடுக்க முடியவில்லை எனவே இது தான் ஸ்ரீகந்த பெருமானின் திருவுள்ளம் போலும் எனக்கருதி, அங்கேயே கோவில் கட்டினர்.

    இதிலிருந்து புற்றிலிருந்து வெளிப்படும் இறைவனுக்கு தனிமகத்துவம் உள்ளது என்பதை அறியலாம்.

    • ஒரு பசு மட்டும் அருகில் உள்ள புற்றில் பால் சுரந்து பீச்ச அதனை நாகம் அருந்துவதைக் கண்ணுற்றார்
    • தம்பிக்கலை ஐயன் திருக்கோவிலின் பின்புறம் புற்று உள்ள நாகர் ஆலயம் உள்ளது.

    ராகு கேது திருத்தலமான தம்பிக்கலை ஐயன் கோவில் ஈரோடு சத்தி மார்க்கத்தில் காஞ்சி கோவில் அருகில் உள்ளது.

    அக்காலத்தில் காஞ்சி கோவில் அருகே வனாந்தரமாக இருந்ததாம்.

    ஒரு முறை தம்பிக்கலை ஐயனின் தம்பி நல்லண்ணன் பசுக்களை அருகில் உள்ள வனத்தில் மேய்த்து வருகையில்

    ஒரு பசு மட்டும் அருகில் உள்ள புற்றில் பால் சுரந்து பீச்ச அதனை நாகம் அருந்துவதைக் கண்ணுற்றார், தம்பிக்கலை ஐயன்.

    இக்காட்சியைக் கண்டபோதே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.

    தம்பிக்கலை ஐயன் திருக்கோவிலின் பின்புறம் புற்று உள்ள நாகர் ஆலயம் உள்ளது.

    அந்த இடத்தில் மண் செம்பில் தீர்த்தம் எடுத்து வந்து அவ்விடத்தில் மந்திரித்துக் குடித்தால் தோல் வியாதிகளும் மனநோய்களும் குணமாகும்.

    • புதுக்கோட்டையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது பேரையூர்.
    • பால் அவரது உடலில் பட்டவுடன் நீலநிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.

    புதுக்கோட்டையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது பேரையூர்.

    இங்குள்ள ஆலயத்தில் உள்ள இறைவனின் பெயர் நாகநாதசுவாமி என்பதாகும்.

    நாகராஜன் வணங்கிப் பூசித்த திருத்தலம். எனவே இறைவன் நாகநாதன் எனப்படுகிறான்.

    திருத்தலத்தில் நாகநாதருக்குப் பால் அபிஷேகம் செய்வார்கள்.

    பால் அவரது உடலில் பட்டவுடன் நீலநிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.

    சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரிய பகவான் இங்கு வழிபட்டு நலம் பெற்ற சிவஸ்தலம் இது.

    • இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
    • கழுத்தில் மாலையாக விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

    1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.

    2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.

    3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

    4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

    5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

    6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.

    7. பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

    8. கழுத்தில் மாலையாக விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

    • நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.
    • மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.

    நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.

    இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி,

    சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.

    இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும்.

    ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம்

    செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    சுக்ல பஷ சஷ்டியன்று அதிகாலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை அறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம்

    திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள், வைத்து நிவேதினம், செய்து தூபதீபம் காட்டுப் பிராத்தனை செய்ய வேண்டும்.

    பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம்.

    காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப் பொருட்களை சாப்பிட்டு விட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.

    மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.

    அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிடலாம். நாகராஜ விரதமிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

    அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக் காணலாம் என சர்ப்ப தோஷபரிகார நூல் கூறுகிறது.

    • கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
    • பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.

    கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.

    அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாக உருவத்தை சிலையாக செய்து

    தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.

    ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது.

    அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சரும வியாதி குணமாகவில்லை.

    நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை,

    சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது.

    அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார்.

    அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.

    தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார்.

    அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்தது.

    இந்த விஷயம் தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர், "எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும்

    இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்" என்றார்.

    மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது

    பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.

    மன்னரின் உடலில் இதுநாள் வரை இருந்த சருமவியாதி நீங்கியது.

    இதை கண்டு அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன்

    பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன்

    கேரள தேசத்திற்கு திரும்ப அனுப்பி வைத்தார்.

    ×