search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balveer Singh"

    • தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்குகளில் வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் மற்றும் 2 போலீசார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4-வது வழக்கு ஒன்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வழக்கில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி, அங்கு பணியாற்றும் காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலில் சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்டவர்கள் இன்று அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தனர்.

    அம்பை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக முதலில் சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. பின்னர், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் இன்று அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ×