என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bandicoots"
- 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது.
- அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடந்த 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில், சேமிப்புக் கிடங்கில்,அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கிடங்கின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது .இதனை முறையாக பராமரிக்காததால் அவற்றின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சேமிப்பு கிடங்கு தரமில்லாத கட்டுமான பணியால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கூட்டுறவு சங்க நிர்வாகமும் அலட்சியப்படுத்தி வருவதால் அந்தப் பள்ளத்தின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து உணவுப் பொருட்களை நாசமாக்கி வருகின்றன. இதனால் சுத்தமான உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
எனவே கூட்டுறவு சங்க நிர்வாகம், ரேஷன் கடை நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.