search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank fraud case"

    • ஹிமேஷ் என்பவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
    • வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சூளைமேடு பஜனை கோவில் இரண்டாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் ஹிமேஷ் என்பவரது வீட்டில் 5 சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 8.30 மணியில் இருந்து சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீட்டில் 6 மாதங்களாக வசித்து வரும் வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி அவரது மனைவி உமா சங்கரி வீட்டில் சி.பி.ஐ. 6 அதிகாரிகள் பலர் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    மும்பை:

    17 வங்கிகள் கூட்டமைப்பை ஏமாற்றி ரூ.34,615 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீபக் வதாவன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த மோசடி பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. சோதனை நடத்திவருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அவினாஷ் போசாலே என்ற பிரபல காண்டிராக்டரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹெலிகாப்டரை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ரூ.8,100 கோடி மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய 4 தொழில் அதிபர்களை நாடு கடத்தி அழைத்து வர நடவடிக்கை தொடங்கப்பட்டு இருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. #SterlingBiotech #Promoters #BankFraudCase
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனம் ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட். ரூ.8 ஆயிரத்து 100 கோடி வங்கிக்கடன் மோசடி செய்தது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் அதிபர்கள் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேத்தன் குமார், தீப்தி சேத்தன், ஹிதேஷ்குமார் நரேந்திரபாய் படேல் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

    டெல்லியில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சில சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு, காலவரையற்ற பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி கோர்ட்டில் நீதிபதி சதீஷ் குமார் அரோரா முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா கூறியதாவது:-

    ஸ்டெர்லிங் நிறுவன அதிபர்கள் 4 பேரும் இத்தாலி மற்றும் நைஜீரியாவில் பதுங்கி இருக்கிறார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப அடிக்கடி நாட்டை மாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்‘ பிறப்பிக்க சர்வதேச போலீசை அணுக விரும்புகிறோம். அவர்களை நாடு கடத்தி அழைத்துவர நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதற்கு கோர்ட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlingBiotech #Promoters  #BankFraudCase 
    வங்கி மோசடி வழக்கில் லண்டனில் விசாரணையை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா இன்று கோர்ட்டில் ஆஜரான நிலையில், செப்டம்பர் 12 வரை அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்திய வங்கிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் கடந்த முறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். முதன்முறையாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.

    விசாரணையின் இறுதியில் செப்டம்பர் 12-ம் தேதி வரை மல்லையாவுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். அதே தேதியில் வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் அன்றைய தினம் மல்லையா ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையின் வீடியோ தனக்கு வேண்டும் என நீதிபதி இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், விரைவில் அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னாதாக வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’ என மல்லையா தெரிவித்தார்.
    ×