search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANvsSA"

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    • 2-வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

    வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸட் வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் நடைபெற்றது.

    கடந்த 29-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டோனி டி ஜோர்ஜி 177 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களும், முல்டர் 105 ரன்களும் விளாச முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடாவின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 38 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 159 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் பேட்டர்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனதால் வங்கதேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு தென்ஆப்பிரிக்கா கேட்டுக்கொண்டது.

    2-வது இன்னிங்சில் மகாராஜ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 143 ரன்னில் சுருண்டது. மகாராஜ் 5 விக்கெட்டும், முத்துசாமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    • வங்கதேசத்தில் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.

    உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
    • டிகாக் 18 ரன்னில் வெளியேறினார்.

    வாஷிங்டன்:

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி வருகின்றனர். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இரு அணி வீரர்கள் விவரம்:

    தென் ஆப்பிரிக்கா:

    ரிசா ஹெண்ட்ரிக்ஸ், குயின்டன் டிகாக், மார்க்ரம் (கேப்டன்), ஸ்டப்ஸ், ஹெண்ட்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மெக்ரோ ஜென்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அண்ட்ரிச் நோர்ட்ச், பார்ட்மென்

    வங்காளதேசம்:

    தச்டித் ஹசன், லிண்டன் தாஸ், நஜிமுல் ஹசன் (கேப்டன்), தவுகித் ஹிரிடே, ஷகிப் அல் ஹசன், ஜகர் அலி, முகமதுல்லா, ரஷித் ஹசன், தஷ்கின் அகமது, தம்சிம் அகமது ஷேக், முஸ்தபிசூர் ரகுமான்

    ×