என் மலர்
நீங்கள் தேடியது "beat"
பணத் தகராறில் பெண் போலீசின் கன்னத்தில் அறை விட்ட போலீஸ்காரர் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவனியாபுரம்:
அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் மாலா (வயது38). இவர் அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் உக்கிரபாண்டியிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.
இந்த நிலையில் மாலா 6 மாதம் மருத்துவ விடுப்பில் சென்றார். நேற்று இரவு பணிக்கு வந்த மாலாவிடம் உக்கிரபாண்டி, கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் உக்கிரபாண்டி மாலாவின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்டார். அதன் பின்னர் மாலா தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.