search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beauty treatment"

    • வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
    • டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    உடல் எடையை குறைத்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைந்து முகம், கை, கழுத்து, கைவிரல் போன்ற பகுதிகளில் சுருக்கங்கள் தோன்றும். இதனை போக்குவதற்கு வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.

    இந்த டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். முட்டையின் வெள்ளைக்கரு, முல்தானிமட்டி, தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    டைட்டனிங் மாஸ்குகளும், ரைட்டனின் ஃபேஷியல்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகை பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை.

    முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு மட்டுமில்லாமல் தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலும் வறண்ட சருமம் சுருக்கம் இல்லாமல் பொலிவாக இருக்கும்.

    புரோட்டின் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. பெண்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

    • சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
    • ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

     க்ளென்சிங்

    ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

     ஸ்கிரப்

    க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

     மசாஜ்

    கடைகளில் ஃபேஷியல் க்ரீம் வாங்கிக்கொள்ளவும். அல்லது, இயற்கையான பொருளைக் கொண்டு செய்வதென்றால் நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். க்ரீம்/பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும்.

    தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

     ஃபேஸ் பேக்

    மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும்.

    முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும், 10 நிமிடங்களுக்கு இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.

    • வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான்.
    • பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை.

    வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. இப்படி கவனிக்கப்படாமல் விடுவதாலேயே பாத வெடிப்பு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும்.

    பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

     செய்முறை-1

    தேவையான பொருள்கள்

    வெள்ளை வினிகர்

    கருங்கல் அல்லது கடைகளில் விற்கப்படும் பியுமிஸ் கல் (pumice stone)

    ஆலிவ் ஆயில்

    வெந்நீர்

    செயல்முறை

    முதலில், பாதங்களை வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி, அதில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

    கருங்கல் அல்லது பியுமிஸ் ஸ்டோன் கொண்டு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இதன் மூலம் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.

    அதன்பின் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்து, கழுவிய பின், நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து, நடக்காமல் ஓய்வெடுக்க வேண்டும். இதுபோல அடிக்கடி செய்துவர பாத வெடிப்பு குறையும்.

     செய்முறை-2

    தேவையான பொருள்கள்

    அவகடோ - ஒன்று

    வாழைப்பழம் - இரண்டு

    செயல்முறை

    அவகெடோ, வாழைப்பழம் இரண்டிலும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கான சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், வெளிப்பூச்சில் அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்கும். இவை இரண்டையும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை பாதம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவ வேண்டும்.

    இதேபோன்று வாரத்திற்கு ஒருமுறை செய்துவந்தால் மெல்ல மெல்ல பாத வெடிப்பு குறைந்து, முழுமையாக குணமடைந்துவிடும்.

     செய்முறை 3

    தேவையான பொருள்கள்:

    பூசணிக்காய்

    காபி தூள்

    நாட்டுச்சக்கரை

    பாதாம் எண்ணைய்

    எலுமிச்சை சாறு

    செய்முறை:

    பூசணிக்காயை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து எடுத்த பூசணிக்காயை மிக்சியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைகளில் இது pumpkin pure என்ற பெயரில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.

    பூசணி பேஸ்ட்டுடன், பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை 2 டீஸ்பூன், காபி தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கி ஸ்கிரப் மாதிரி தயாரித்துக்கொண்டு, அதனை பாதம் முழுவதும் அப்ளை செய்த பின்னர், 15 நிமிடங்கள் வைத்திருந்து கால்களை கழுவிக்கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர பாதவெடிப்பு நிச்சயம் குறைந்துவிடும்.

    ×