search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "benefit"

    • 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.
    • பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     மூலனூர்:

    மூலனூர் வட்டாரத்தில் மானியத்தில் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும்மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மூன்று சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை திட்டங்களை பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக அல்லது மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் பெரமியம், எரசனம் பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறலாம். இதில் 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.

    மேலும் பண்ணை குட்டை அமைத்தல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளர்த்தல், நகரும் காய்கறி வண்டிகள்,குளிரூட்டப்பட்ட வண்டி ஆகியவை குறைந்த விலையில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வண்டி வாங்க மானியம் வழங்கப்படும்.

    பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த செலவினம் ரூ. 2 லட்சம் ஆகும். இதற்கான 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே காளான் உற்பத்தி கூடம்அமைக்கும் பெண் விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை 9677776214, 9790526223 என்ற எண்களில் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உலக நன்மை வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் சண்டி யாகம் நடைபெற்றது.
    • 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள வதான்யேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் அருளாசியுடன் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சண்டி யாகம் நடைபெற்றது.

    இந்த யாகம் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் கோவில் குருக்கள் பாலச்சந்தர் சிவாச்சாரியார் முதலில் கோமாதா பூஜை, 2-வது குதிரை பூஜை, 3-வது ஒட்டக பூஜை செய்தார்.

    பின்னர், செவ்வாழைப்பழம், விளாம்பழம் உள்ளிட்ட 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பிரம்மச்சாரியர்கள், 9 கன்னிகா பூஜைகளும், பைரவருக்கு வடுக பூஜைகளும் நடைபெற்றது.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நாமக்கல்லில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இந்த ஜமாபந்திக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இறுதி நாளான நேற்று ஜோடிகை அணியார், சர்வமான்ய அணியார், காதப்பள்ளி உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர்் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 146 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு சரிபார்த்தார்.

    பின்னர் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தற்காலிக உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 44 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 20 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளையும் என மொத்தம் 153 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார்கள் அருள், மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    ×