என் மலர்
நீங்கள் தேடியது "Benelli"
- விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காமல் இருப்பதும் காரணம்.
- இதுதான் விற்பனை மந்த நிலைக்கு காரணம்.
இந்திய சந்தையில் பெனலி மற்றும் கீவே மோட்டார்சைக்கிள் மாடல்களை ஆதிஷ்வர் ஆட்டோ எனும் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் லியோன்சினோ 500, 502C மற்றும் கீவே K300 N போன்ற மாடல்களுக்கு அசத்தலான விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
புதிய அறிவிப்பின் படி பெனலி லியோன்சினோ 500 மாடலின் விலை தற்போது ரூ. 61 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக லியோன்சினோ 500 விலை ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது. இதேபோன்று 502C மாடலின் விலை ரூ. 60 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் என மாறியுள்ளது.
கீவே K300 N மாடலின் விலை ரூ. 26 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என மாறி இருக்கிறது. விலை குறைப்பு பிப்ரவரி 8-ம் தேதி அமலுக்கு வந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் பெனலி மற்றும் கீவே மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காமல் இருப்பதும் விலை குறைப்புக்கு காரணமாக இருக்கலாம். பெனலி மற்றும் கீவே பைக்குகளின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்படாததே விற்பனைக்கு மந்த நிலைக்கு காரணம் ஆகும். அந்த வகையில், தற்போதைய விலை குறைப்பு விற்Hனையை அதிகப்டுத்த உதவும் என்று தெரிகிறது.
- பெனலி பைக் மாடல்களின் இந்திய விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
- பைக் மாடல்களின் விலை தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பெனலி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வில் மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள்களான TRK 502 மற்றும் TRK 502X பாதிக்கப்பட்டு உள்ளன.
விலை உயர்வு காரணமாக பெனலி TRK 502 சீரிஸ் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் முந்தைய விலை ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
புதிய விலை விவரங்கள்:
பெனலி TRK 502 டார்க் கிரே ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 வைட் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 பிளாக் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 கிரீன் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502X டார்க் கிரே ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X வைட் ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X எல்லோ ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X கிரீன் ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
புதிய பெனலி TRK 502 சீரிசின் அனைத்து மாடல்கள் விலையும் ஒரே மாதிரியே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெனலி TRK 502X சீரிசில் எல்லோ நிறம் தவிர மற்ற மாடல்கள் விலை ஒரே மாதிரியே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விலை தவிர பெனலி TRK 502 சீரிஸ் மாடல்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடல்களில் 500சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 46.8 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.