என் மலர்
நீங்கள் தேடியது "Bharat Army"
- உலகக் கோப்பையில் முதன்முறையாக விராட் கோலி டக்அவுட் ஆனார்
- இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் டக்அவுட் ஆகினர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கிய ஆடுகளத்தில், இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்க திணறினார்கள்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 229 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். விராட் கோலியை கேலி செய்யும் வகையில், பார்மி ஆர்மி தனது டுவிட்டர் பக்கத்தில் வாத்து தலைக்குப் பதிலாக விராட் கோலி தலையை வைத்து போட்டோ ஒன்றை வெளியிட்டது.
அதன்பின் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 129 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் முன்னணி வீரர்களான ஜோ ரூட் முதல் பந்திலும், பென் ஸ்டோக்ஸ் 9 பந்துகளை சந்தித்தும் டக்அவுட் ஆனார்கள்.
இதை கேலி செய்யும் விதமாக பாரத் ஆர்மி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாத்து தலைக்குப் பதிலாக ரூட், ஸ்டோக்ஸ் தலையை வைத்து படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தது.
இங்கிலாந்து அணியை ஆதரிக்கும் வகையில் ரசிகர்கள் பார்மி ஆர்மி அமைப்பு உருவாக்கினர். இந்த அமைப்பு இங்கிலாந்து விளையாடும் இடத்திற்குச் சென்று ஆதரவு தெரிவிக்கும். அதேபோல் இந்திய அணியை ஆதிரிக்கும் ரசிகர்கள் பாரத் ஆர்மி என பெயர் வைத்துள்ளனர். இந்திய அணி விளையாடும் இடத்திற்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Just out for a morning walk pic.twitter.com/Mv425ddQvU
— England's Barmy Army ?? (@TheBarmyArmy) October 29, 2023
Just out for an evening walk ? https://t.co/G0P54UrpRB pic.twitter.com/SugpLAQPbB
— The Bharat Army (@thebharatarmy) October 29, 2023
Just give us some time to make the edits. @TheBarmyArmy https://t.co/G0P54UrpRB pic.twitter.com/qBZDz1E04Z
— The Bharat Army (@thebharatarmy) October 29, 2023