என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bharat Biotech"
- பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
- பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித குறைபாடும் கொண்டிருக்கவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசியால் மிகவும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படுகிறது என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜென்கா நிறுவனம் கூறிய நிலையில், கோவாக்சின் (COVAXIN) மிகவும் பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "பாதுகாப்பு எனும் ஒற்றை இலக்கை குறிக்கோளாக கொண்டு தான் கோவாக்சின் உருவாக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செயல்திறன் சோதனை செய்யப்பட்ட ஒரே கோவிட் 19 தடுப்பூசி கோவாக்சின் மட்டும் தான்."
"உரிமம் பெறும் வழிமுறையின் கீழ் கோவாக்சின் தடுப்பூசி 27 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை முறையில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது."
"கோவாக்சின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. கோவாக்சின் ஆயுள் காலம் தொடர்பாக தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன."
"மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆய்வு முடிவுகள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் அடிப்படையில் கோவாக்சின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித குறைபாடும் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது."
"அனுபவம் மிக்க ஆய்வாளர்கள் அடங்கிய பாரத் பயோடெக் குழுவினர் கோவிட் தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைவு என்பதை நன்கு அறிந்துள்ளனர். எனினும், இவை பயனாளிகள் உடலில் அவர்களது ஆயுள் முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக எங்களது அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பு எனும் ஒற்றை நோக்கத்தை குறிக்கோளாக கொண்டே உருவாக்கப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளது.
- கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்சின்.
- கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
புதுடெல்லி:
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மேற்படி தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியானது. அரசியல் அழுத்தம் காரணமாக தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டதாகவும், இதனால் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தன.
மேலும், தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது இந்திய மருத்துவம் மற்றும் விஞ்ஞான துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதில் எவ்வித அரசியல் நெருக்கடியும் இல்லை. அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகள் ஆராயப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது. மக்களை குழப்பும் வகையில் பொய் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளது.
- பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம்.
- மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது.
புதுடெல்லி:
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத் துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது.
இந்த மருந்தை 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், எளிதாக சேமித்து வைத்துக்கொள்ளலாம், பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து கொரோனா தடுப்பூசியைப் போலவே மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, நாசி வழியாக செலுத்தும் பிபிவி 154 என்ற மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றியை தந்த நிலையில், மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகள் அனுப்பப்பட்டுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசியாக இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸாக இந்த மருந்தை போட்டுக் கொண்டவர்களும் தடுப்பூசி தரும் அதே அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு உடலில் உண்டாகிறது. இது செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பயனுள்ளதாக இருக்கும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
- பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம்.
- மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது.
இந்த மருந்தை 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், எளிதாக சேமித்து வைத்துக்கொள்ளலாம், பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து கொரோனா தடுப்பூசியைப் போலவே மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாசி வழியாக செலுத்தும் பிபிவி 154 என்ற மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக இந்த நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம். இதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றியை தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகள் அனுப்பப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசியாக இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸாக இந்த மருந்தை போட்டுக்கொண்டவர்களும் தடுப்பூசி தரும் அதே அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு உடலில் உண்டாகிறது. இது செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பயனுள்ளதாக இருக்கும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்