என் மலர்
நீங்கள் தேடியது "Bharatanatyam students"
- புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா கொண்டாடப்பட்டது.
- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா கொண்டாடப்பட்டது.
தலைமை விருந்தினராக புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
மேலும் பரதநாட்டிய மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தரராஜன் விழாவுக்கு தலைமை தாங்கினார்.
தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணியன், நாடகவியல் துறை உதவி பேராசிரியர் முருகவேல், இசை பண்பாட்டு துறை குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுந்தர நாட்டிய கேந்திர பள்ளியின் குரு. சுந்தரமூர்த்தி மற்றும் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.