search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharathiraja"

    • கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த வெப் தொடருக்கு `தீவினை போற்று’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

    மேலும் இவர் தெலுங்கிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

    அடுத்ததாக இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அதே சமயம் ஐஸ்வர்யா லட்சுமி புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் மோசு என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியாவார்.

    இந்த வெப் தொடருக்கு `தீவினை போற்று' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு 40 நாட்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. தற்பொழுது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடர் 1990-களில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.  இதனை யாழி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தொடரில் ஐஷ்வர்யா லட்சுமியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பாபு ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    'தீவினை போற்று' வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாழை படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் வாழை படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவின் லிங்க்கை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய பாரதிராஜா, "சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பாரத்து யோசித்தது உண்டு. 'வாழை' அப்படியொரு படம். படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

    சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மாரி செல்வராஜ் அவரது பதிவில், "நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறியிருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன். இயக்குனர் இமயத்திற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    • கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார்.
    • சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து.

    தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
    • முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. 24 வருடமாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பாஜகவும் 51 இடங்களை பிஜு ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர்த்து 3 சுயேட்ச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த முறை பதிவியேற்பவர்களில் 82 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏக்களாக பதியேற்பவர்கள் ஆவர்.

    சட்டமன்றத் தேர்தலில் கன்டாபாஞ்சி மற்றும் கின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின்ஜிலியில் வெற்றி பெற்ற நிலையில் கன்டாபாஞ்சில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பக் என்பவரிடம் 16,334 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

    அதாவது, நவீன் பட்நாயக் கின்ஜிலியின் எம்.எல்.ஏ வாக மேடையில் பதிவேற்றபின் இறங்கி நடந்து வரும்போது கன்டாபாஞ்சில் அவரை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    உடனே பட்நாயக் ' ஓ நீங்கள் தான் என்னை தோற்கடித்தீர்கள்' என்று கூறியபடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் பழம்பெரும் அரசியல்வாதியாக இருக்கும் பாரதிராஜாவும் முதல்முறையாக சட்டமன்றத்துக்கு வரும் சூர்யாவும் கிளைமாக்சில் சந்தித்து பேசும் காட்சியை தற்போது ஒடிசா சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் பிரதி செய்வதாக அமைத்துள்ளது என நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். முன்னதாக நவீன் பட்நாயக் பதியேற்க சட்டமன்றத்துக்குள் வரும்போது பாஜகவினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

     

    • இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படத்தின் கில்ம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது

    அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
    • "கள்வன்" படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் P.V. ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார்.

     இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கள்வன்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

    காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என "கள்வன்" படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது.

    அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் திருடன் கெம்பன், அந்த வேலையில் சேர அவனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தைத் திரட்ட அவன் எடுக்கும் முடிவுகள், அவனை எதிர்பாராத பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து அவன் விடுபட்டானா? அவன் கனவு நிறைவேறியதா ? என்பதே இப்படத்தின் கதை.

    "கள்வன்" படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் P.V. ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், N.K. ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளார்கள்.

    இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை, எழுத்தாளர் ரமேஷ் ஐயப்பனுடன் இயக்குநர் P.V. ஷங்கர் எழுதியுள்ளார்.

    வரும் மே 14 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "கள்வன்" படத்தை கண்டுகளியுங்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்.
    • ஆயுதஎழுத்து திரைப்படத்தில் செல்வநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் , சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை , முதல் மரியாதை போன்ற மெகா ஹீட் படங்களை இயக்கினார்.

    தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு  மாற்றிய கலைஞர்களில் பாரதி ராஜா முக்கியமான ஒருவர். படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பிறப் படங்களில் நடித்துக இருக்கிறார். ஆயுதஎழுத்து திரைப்படத்தில் செல்வநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை, ராக்கி, வாத்தி, திருசிற்றம்பலம் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த கள்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனரான பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் "நிறம் மாறும் உலகில்" நடித்துள்ளார்.

    பாரதிராஜாவுடன் நட்டி, ரியோராஜ் மற்றும் சாண்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக் ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமாஇன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது.

    இப்படத்தில் 4 நபர்களின் வாழ்க்கையையும் அதை ஒருப் புள்ளியில் இணையும் கதைகக்களமாக அமைந்து இருக்கிறது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படம் இது என குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. படம் வெளியாகும் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முத்துமலை முருகன் கோவிலில் பாரதிராஜா சுவாமி தரிசனம் செய்தனர்.
    • நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன்.

    கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ்பாண்டியன், சின்னம் தராத நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

    இந்த பிரச்சாரத்தை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பங்கேற்று துவக்கி வைத்தார். முன்னதாக அவர் முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் பிறகு இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், நான் அரசியல்வாதி அல்ல. பொது மனிதனாக சொல்கிறேன். நாம் தமிழர் கட்சியினர் சீமான் வழியில் வெற்றி பெறுவார். இளைஞர்கள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன். எந்த சின்னம் கொடுத்தாலும் சீமான் வெற்றி பெறுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். என் பிள்ளை சீமானுக்கு புல்லும் ஆயுதம்

    சீமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் இதுபோல குற்றச்சாட்டுகளை தெரிவித்து தான் வருகிறார்கள்" என அவர் தெரிவித்தார்.

    • அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை இன்று இயக்குநர் சீனு ராமசாமி தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.
    • இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் நாளை (பிப் 29) காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, லிங்குசாமி, சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் நாசர் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

    • இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலர் கருத்து.
    • களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது.

    இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வரிசையில் இயக்குனர் பாரதிராஜா அமீருக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திரு.ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே.. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும்."

    "உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு.அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிடவேண்டாம். பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டுபடம் இயக்கி,அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார்."

    "அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..! ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்..! நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..! மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும்,அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்து இருக்கிறார்.



    • தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பாபு.
    • பாபு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.

    பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.

    அன்றிலிருந்து 'என் உயிர் தோழன்' பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். நான்கு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு 5-வது படத்தில் தனது திரை வாழ்க்கையே தொலைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


    பாபு

    கடந்த 1991-ல் 'மனசார வாழ்த்துக்களேன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு தயாராகினார். ஆனால், படப்பிடிப்பு குழுவினர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறி டூப் நடிகரை தயார்படுத்தியுள்ளனர். பாபு நானே குதிக்கிறேன் என்று குதித்த போது

    டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.


    பாரதிராஜா - பாபு

    இந்நிலையில், நடிகர் பாபு இன்று காலமானார். இவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த " என் உயிர் தோழன் பாபு "வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.


    ×