என் மலர்
சினிமா செய்திகள்
X
மீண்டும் படம் இயக்க ரெடியான பாரதிராஜா
Byமாலை மலர்15 March 2023 6:21 PM IST
- இயக்குனர் பாரதிராஜா தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
- இவர் "கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் "கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாரதிராஜா
இதனிடையே இயக்குனர் பாரதிராஜா மீண்டும் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்கவுள்ளதாகவும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'தாய்மெய்' என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
X